தமிழ்நாட்டில் ஏப்., 19ம் தேதி பொது விடுமுறை... எதற்கு தெரியுமா?

Apr 05, 2024,07:47 PM IST

சென்னை: தமிழகம் முழுவதும் ஏப்., 19ம் தேதி பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2024ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதால், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக இந்த பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் 18 ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினமே தமிழ்நாட்டில்  காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. 


ஏழு கட்டங்களாக நடத்தப்படும் இந்த தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு  தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகளும் அன்றே வெளியிடப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.




இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளும் தற்போது அமலில் இருந்து வருவதால், பறக்கும் படையினர் தீவிர சோதனை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடி விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி வாக்குப்பதிவு நாளான்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 


இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கிணங்க, தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார். தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், வாக்குப்பதிவு நாளன்று தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள்,கடைகள் உள்ளிட்ட அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்