மும்பை: இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் விற்பனை இன்று தொடங்கியுள்ளது. மும்பை மற்றும் டெல்லியில் உள்ள ஆப்பிள் விற்பனை மையங்களில் அதிகாலையிலேயே வாடிக்கையாளர்கள் திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.
உலகின் மிகவும் பிரபலமான ஐ போன் தயாரிப்பு நிறுவனம் தான் ஆப்பிள். ஆண்டு தோறும் இந்நிறுவனம் புதிய வகை செல்போன் மாடல்களை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான ஐபோன் 16 சீரிஸ் இன்று விற்பனை தொடங்கியுள்ளது. ஐ போன் நிறுவனம் கடந்த 9ம் தேதி இந்த புதிய மாடல் போனை அறிமுகம் செய்தது. பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட ஐபோன் 16 சீரிசில் மொத்தம் 4 மாடல்கள் உள்ளன. ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 புரோ, இபோன் 16 புரோ மேக்ஸ் ஆகிய 4 மாடல் போன்கள் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதன் முன்பதிவு தொடங்கியது. ஏராளமானோர் முன்பதிவு செய்திருந்த நிலையில், இன்று டெல்லி மற்றும் மும்பையில் உள்ள ஆப்பிள் ஐபோன் விற்பனை மையத்தில் அதிகாலை முதலே கூட்டம் கூடியது. கடை திறக்கும் வரை வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருந்து ஐபோன்களை வாங்கிச் சென்றனர். மும்பையில் உள்ள பிகேசி ஆப்பிள் மையத்தில் 21 மணி நேரம் காத்திருந்து புதிய ஐபோனை வாங்கியதாக வாடிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், நான் நேற்று காலை 11 மணிக்கு மும்பை வந்தேன். முதல் நபராக நான் தான் மும்பையில் உள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு இன்று காலை 8 மணிக்கு சென்றேன். இந்த நாள் எனக்கு உற்சாகமாக தொடங்கி உள்ளது. மும்பையில் இந்த போனை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
ஐபோன் 16 சீரிஸ் மொபைகளை வாங்கும் வாடிக்கையாளர்கள், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ ஆகிய வங்கி அட்டைகள் பயன்படுத்தினால் ரூ.5000 வரை உடனடி கேஷ்பேக் கிடைக்கும், கூடுதலாக, பெரும்பாலான முன்னணி வங்கிகள் 3 முதல் 6 மாதங்களுக்கு கட்டணமில்லா சுலப மாதத் தவணையினையும் வழங்குகிறது. கடந்த வருடம் ஐபோன் 15 ப்ரோ ரூ.1,34,900க்கும், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ரூ.1,59.900க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த வருடத்திற்கான ஐபோன் 16 - ரூ.79,900த்திற்கும், ஐபோன் 16 பிளஸ் - ரூ.89.900த்திற்கும், ஐபோன் 16 ப்ரோ - ரூ.1,19,900த்திற்கும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் - ரூ.1,44,990க்கும் விற்கப்பட்டு வருகிறது. சென்ற வருட போன்களுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டிற்கான ஐபோன்களின் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!
தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!