வாங்க... வாங்க... விலை சல்லிசுதான்.. 2 ஐ போன்.. வாங்கிப் போடுங்க பாஸு!!

Jul 27, 2024,03:54 PM IST

டெல்லி: மத்திய பட்ஜெட் எதிரொலியாக ஐபோன்களின் விலையை 3 முதல் 4 சதவீதம் வரை குறைத்துள்ளது ஆப்பிள் ஐ போன் நிறுவனம்.


ஐ போன் வாங்கும் மோகம் தற்பொழுது அனைத்து தரப்பு மக்களிடம் அதிகரித்துள்ளது. ஐ போன் வாங்குவது ஒரு தகுதியாக இன்றைய இளைய தலைமுறையினர் கருதி வருகின்றனர். இத்தகைய ஐ போன்கள் விலை அதிகம் என்பதால், அதிகமானோருக்கு அது எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.  அந்த நிலை தற்போது மாறியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மொபைல் போன்கள் மற்றும் அதன் உதிரி பாகங்களின் அடிப்படை சுங்க வரியை 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.




இதனால்  ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல் ஐபோன்களுக்கான விலையை ஆப்பிள் நிறுவனம் 3 முதல் 4 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதாவது 5,000 முதல் 6,000 வரை விலை குறைந்துள்ளது.இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐ போன் 13, ஐபோன் 14 மற்றும் ஐபோன் 15 ஆகியவற்றின் விலையில் இருந்து ரூ.3000 ரூபாய் வரை குறைக்கப்படுகிறது. இந்த விலை குறைவு ஐ போன் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


சிஐஆர்பி வெளியிட்ட தகவலின் படி, ஆண்ட்ராய்டு பயனர்கள் ஆப்பிள் ஐபோனுக்கு மாறுவது தற்போது அதிகரித்துள்ளது. ஜூன் காலாண்டில், புதிய ஐபோன் வாங்குபவர்களில் ஐந்தாண்டுகளில் அதிகபட்சமாக 17 சதவீதம் பேர் முன்னாள் ஆண்டராய்டு பயனர்களாக இருக்கின்றனர். இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 10 சதவீதமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தை பொறுத்தவரை இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஐ போன்களில் 99 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. ஒரு சில உயர்நிலை ஐபோன் மாடல்களின் சிறிய தேர்வு மட்டுமே தொடர்ந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்