அடுத்தடுத்து சிக்கல்.. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு.. பிரச்சாரம் ரத்து!

Jul 18, 2024,11:28 AM IST

வாஷிங்டன்:   அமெரிக்காவில் அதிபர் தேர்தல் களைகட்டிய நிலையில், அதிபர் ஜோ பைடனுக்கு அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே விவாதங்களில் அவரது செயல்பாடு சர்ச்சையான நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் பங்கேற்க இருந்த பிரச்சாரக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.


அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிட இருக்கிறார். அதேபோல் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரச்சாரக் கூட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது  ஒரு நபர் டிரம்பை துப்பாக்கியால் சுட்டதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்பது நினைவிருக்கலாம். இதனைத் தொடர்ந்து இரு கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரக் கூட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.




ஒரு பக்கம் டிரம்ப்பின் செல்வாக்கு ஏறி வருகிறது. மறுபக்கம் அதிபர் ஜோ பைடனின் செல்வாக்கு சரிந்து வருகிறது. அவர் விவாதங்களில் சரியாக செயல்படவில்லை என்ற கருத்து வலுவாக உள்ளது. மேலும் அவரது வயதும் அவரது செயல்பாடுகளும் கூட அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பைடனுக்கு, 

கடந்த சில தினங்களாக சளி மற்றும் இருமல் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் லேசான கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இதுகுறித்து வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இதனால் அதிபர் தேர்தலுக்காக பங்கேற்க இருந்த பிரச்சார கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவருக்கு லேசான அறிகுறிகள் தான் உள்ளன. ஏற்கனவே இவர் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார். அவர் உடல் நலமாக இருக்கிறார். தற்போது பைடன் டெலாவேர் நகரில் உள்ள அவரது வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 இப்படி அடுத்தடுத்து சிக்கல் வருவதால் பைடன் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா அல்லது மாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்