"நான் ரெடிதான் வரவா".. டான்ஸ் ஆடிய..  1300 பேருக்கு இன்னும் சம்பளம் தரலையாம்!

Oct 07, 2023,05:06 PM IST

சென்னை: லியோ படத்தில் நான் ரெடி தான் என்ற பாடலுக்கு நடனம் ஆடிய 1300 பேருக்கு சம்பளம் கொடுக்கவில்லையாம். இதுதொடர்பாக நடனக் கலைஞர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.


விஜய், த்ரிஷா, நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் லியோ. இத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்னரே பல சிக்கல்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இப்படம் அக்டோபர் 18ம் தேதி வெளிவரும் என்று கூறப்பட்ட நிலையில், தொடந்து சிக்கல் வந்த வண்ணம் இருப்பதினால் குறிப்பிட்ட தேதியில் படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.




படத்தில் ஆபாச வசனங்கள், வன்முறைக் காட்சிகளை சென்சார் போர்டு நீக்கிய பின்னரும் விஜய் பேசிய டிரெய்லர்  டைலாக்கில் கெட்டவார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சர்ச்சை எழுந்தது. ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டதற்கும் பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில் அதுவும் சர்ச்சையில் சிக்கியது. இந்த நிலையில், லியோ படத்திற்கு தற்பொழுது புது சிக்கல் உருவாகி இருக்கிறது. 


லியோ படத்தில், நான் ரெடி தான் என்ற பாடலுக்கு நடனம் ஆடிய 1300 பேருக்கு சம்பளம் பாக்கி உள்ளதாகவும், அதுதொடர்பாக ஆதாரத்துடன்  நடனக்கலைஞர்கள் புகார் அளித்துள்ளதாகவும் தற்பொழுது புது சர்ச்சை கிளம்பி நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பாகி வருகிறது.


உச்ச நடிகர்கள் படம் என்றாலே சின்னப் பிரச்சினை கூட பூதாகரமாகத்தான் பார்க்கப்படும். ஆனால் லியோ தொடர்பாக அடுத்தடுத்து சர்ச்சை வெத்து வருவதால் ரசிகர்கள் சற்றே அப்செட் ஆகியுள்ளனர். ஆனால் அதையும் தாண்டி படம் பிரமாண்ட வெற்றி பெறும் என்பதையும் அழுத்தம் திருத்தமாக ரசிகர்கள் சொல்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்