"உங்க கிட்ட இருந்து விடுதலை வாங்கிக்கிறேன்".. அடுத்தடுத்து விலகும் பாஜக எம்.பிக்கள்.. என்ன காரணம்?

Mar 02, 2024,10:31 PM IST

டெல்லி: கெளதம் கம்பீரைத் தொடர்ந்து, அவரது பாணியில் இன்னொரு பாஜக எம்.பியும் அரசியல் நடவடிக்கையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு  கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். சீட் கிடைக்காது என்ற தகவலால் இவர்கள்  அரசியலை விட்டு விலகுவதாக கூறப்படுகிறது.


கிழக்கு டெல்லி லோக்சபா தொகுதியிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கம்பீர். தீவிர பாஜககாரராக செயல்பட்டு வந்தார். ஆனால் இவரது செயல்பாடுகள் கட்சித் தலைமைக்கு திருப்தி தரவில்லை. இவரால் கட்சிக்கும் பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை என்றும் பலரும் குமுறல் வெளியிட்டு வந்தனர். ஒரு எலைட் தலைவர் போலவே செயல்படுவதாகவும் அதிருப்தி இருந்து வருகிறது.




இந்த நிலையில் வருகிற லோக்சபா தேர்தலில் கம்பீருக்கு மீண்டும் சீட் கிடைக்காது என்று தகவல்கள் கூறுகின்றன. இதனால் அதிருப்தி அடைந்த கெளதம் கம்பீர், தன்னை அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்குமாறு ஜே.பி. நட்டாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இவர் மீண்டும் கிரிக்கெட் பக்கமே போகவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


இந்தச் சூழலில் தற்போது இன்னும் ஒரு பாஜக எம்.பியும் தன்னை அனைத்து அரசியல் நடவடிக்கைகளிலிருந்தும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவரது பெயர் ஜெயந்த் சின்ஹா. இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தொகுதி எம்.பி. ஆவார். இவர் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், என்னை நேரடி தேர்தல் பணிகளிலிருந்து விடுவிக்குமாறு கட்சித் தலைவர் நட்டாவுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். இதன் மூலம் காலநிலை மாற்றம் தொடர்பான முயற்சிகளை நான் கவனம் செலுத்த முடியும். இருப்பினும்  கட்சியின் பொருளாதார மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளில் தொடர்ந்து இணைந்திருப்பேன் என்று கூறியுள்ளார் சின்ஹா.


இவருக்கும் டிக்கெட் கிடைக்காது என்ற அனுமானத்தின் அடிப்படையில் தீவிர அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக கூறப்படுகிறது.


இந்த முறை பாஜக பல்வேறு புதிய உத்திகளை வேட்பாளர் தேர்வில் கடைப்பிடிக்கிறது. அதாவது ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்களை அது தேர்வு செய்துள்ளதாம். பல்வேறு ஃபீட்பேக் மூலம் இவர்களைத் தேர்வு செய்துள்ளனர். இதில் யாருக்கு தொகுதியில் நல்ல பெயர் இருக்கிறதோ அவர்களுக்கே சீட் கொடுக்கப்படுகிறதாம். முக்கிய வேட்பாளர்களாக இருந்தாலும் கூட அவர்களுக்கு தொகுதியில் நல்ல பெயர் இருந்தால்தான் மீண்டும் சீட் கொடுக்கப்படுமாம். பெயர் கெட்டுப் போயிருந்தாலோ அல்லது சர்ச்சை இருந்தாலோ அவர்களுக்கு சீட் கொடுப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.


இதனால் இந்த முறை பல சிட்டிங் எம்.பிக்களுக்கு சீட் கிடைப்பது சந்தேகம் என்று பேச்சு அடிபடுகிறது. ஆனால் கட்சியை விட்டோ, கட்சிப் பணிகளை விட்டோ யார் விலகினாலும் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை என்ற முடிவிலும் பாஜக மேலிடம் உள்ளதாம். கட்சிதான் முக்கியம், தனி நபர்கள் அல்ல என்பது கட்சித் தலைமையின் நிலைப்பாடாம்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்