லண்டன்: கொரோனாவைப் போன்ற ஒரு பெருந்தொற்று உலகைத் தாக்கும். இதைத் தவிர்க்க முடியாது என்று இங்கிலாந்து விஞ்ஞானி சர் பாட்ரிக் வாலன்ஸ் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக இப்போதே இங்கிலாந்து அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது என்றும் அவர் கூறியுள்ளார். இங்கிலாந்தில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே புதிதாக வரப் போகும் அரசு இந்தப் பெருந்தொற்றை சமாளிக்கத் தேவையான சவால்களை சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் வாலன்ஸ் தெரிவித்துள்ளார்.
முன்கூட்டியே நோய்ப் பரவலைக் கண்டுபிடிப்பது மிக மிக முக்கியம். அதை உறுதிப்படுத்த வேண்டும். தடுப்பூசிகள், சிகிச்சை முறைகளை திட்டமிட வேண்டும். இதை முன்கூட்டியே செய்து விட்டால், கோவிட் 19 சமயத்தில் ஏற்பட்டதைப் போன்ற பெரும் பாதிப்புகளை சமாளிக்க முடியும். சர்வதேச அளவிலான ஒத்துழைப்பும் இதில் முக்கியமானது. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
நான் 2021ம் ஆண்டே இதுகுறித்துக் கூறியிருந்தேன். ஆனால் 2023ல் நடந்த ஜி7 மாநாட்டில் இதுகுறித்து பேசப்படவே இல்லை. நீங்கள் இந்த பெருந்தொற்று அபாயத்தை தவிர்க்க முடியாது. அதை மறந்து விட்டு வேறு எதையும் திட்டமிடவும் முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று இப்போது மட்டுப்பட்டு விட்டது. ஆனாலும் அது இன்னும் முழுமையாக ஒழியவில்லை. ஆங்காங்கே கொரோனா இருந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த நிலையில் புதிய பெருந்தொற்று குறித்து இங்கிலாந்து விஞ்ஞானி எச்சரித்திருப்பது சலசலப்பைக் கிளப்பியுள்ளது.
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}