சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திமுகைச் சேர்ந்த அன்னியூர் சிவா இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
சட்டசபையில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில், சபாநாயகர் அப்பாவு உறுப்பினர் சிவாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே. என். நேரு, உதயநிதி ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்ததை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அத்தொகுதிக்கு வரும் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பாக அன்னியூர் சிவா, பாமக சார்பாக சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக அபிநயா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 29 பேர் போட்டியிட்டனர். அதிமுக, தேமுதிக ஆகியவை தேர்தலை புறக்கணித்து விட்டன.
கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் வாக்கு எண்ணும் பணி கடந்த 13ம் தேதி நடந்தது. தபால் வாக்குப்பதிவு தொடங்கி 20 சுற்றுக்கள் வரை தொடர்ந்து திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்தபடியே இருந்தார். இறுதியில் 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். கிட்டத்தட்ட ஒன்றே கால் லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை சிவா பெற்றார். 2வது இடத்தை பாமகவும், 3வது இடத்தை நாம் தமிழர் கட்சியும் பெற்றன.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}