அண்ணாமலை Vs அதிமுக.. மீண்டும் சண்டை.. "Sunday" சேதி இதுதான்!

Apr 30, 2023,03:18 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக பெரிய கட்சியாக இருந்தாலும், பிரதமர் மோடிதான் தேர்தலுக்கான முகம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். மறுபக்கம், அண்ணாமலைக்கு கெடு விதித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். இதனால் அதிமுக பாஜக இடையே மீண்டும் உரசல் ஏற்பட்டுள்ளது.


சமீப காலமாக தமிழ்நாடு பாஜக தலைமைக்கும், அதிமுக தலைமைக்கும் இடையே நீரு பெத்த நெருப்பாக மோதல் நிலவி வருகிறது. 2ம் கட்டத் தலைவர்களிடையே நடந்த மோதல் கடைசியில் எடப்பாடி பழனிச்சாமி மூலமாக பெரிய மோதலாக மாறியது. அண்ணாமலைப் பத்தி பேசவே பேசாதீங்க.. அவர் விளம்பரம் தேடுகிறார். அவரைப் பற்றியல்லாம் என்கிட்ட கேட்காதீங்க என்று எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக கூறவே, டெல்லி பாஜக தலைமை சற்றே கவலை அடைந்தது.


உடனடியாக எடப்பாடி பழனிச்சாமியையும், அண்ணாமலையையும் டெல்லிக்கு வரவழைத்து நேருக்கு நேர் உட்கார வைத்து இரு தரப்பையும் கூல் செய்து இனிமேல் சண்டை போடக் கூடாது என்று சொல்லி அனுப்பி வைத்தார் அமித் ஷா. ஆனால் இப்போது மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலும் கூட அந்த டெல்லி சந்திப்பை வைத்துத்தான் வெடித்துள்ளது. வெடி வைத்தவர் தமிழ்நாடு பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.


டெல்லியில் அமித்ஷாவைப் போய்ப் பார்த்த அதிமுக தலைவர்களை கிண்டலடிக்கும் வகையில் ஒரு டிவீட் போட்டிருந்தார் எஸ்.ஆர்.சேகர். அதில் ஆறாக உடைந்து போன அதிமுக என்றும் நக்கலாக சொல்லியிருந்தார். இதற்கு ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். பாஜக இப்படிப் பேசினால் அதிமுகவினர் எதிர் வினையாற்றத் தயங்க மாட்டார்கள் என்று கூறியிருந்தார். சேகரை அண்ணாமலை கண்டிக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தார். ஆனால் அண்ணாமலை இதுவரை கண்டிக்கவில்லை.


இந்தநிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அண்ணாமலைக்குக் கெடு விதித்துள்ளார். அவர் கூறுகையில், எஸ்.ஆர். சேகர் பேசியதற்கு அண்ணாமலை பகிரங்கமாக கண்டனம் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அண்ணாமலை சொல்லித்தான் சேகர் பேசியதாக எடுத்துக் கொள்வோம். அதற்குரிய எதிர்வினையை ஆற்ற வேண்டி வரும். 




அதிமுகவினருக்கும் பேசத் தெரியும். பேசக் கூடாது என்பதற்காக அடக்கி வைத்திருகிறோம். அண்ணாமலை கண்டிக்காவிட்டால் நாங்கள் பேசுவோம் என்று கூறினார் ஜெயக்குமார்.


மறுபக்கம் இன்று செய்தியாளர்களிடம் அண்ணாமலே பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் அதிமுகதான் பெரிய கட்சி.. நாங்கள் மறுக்கவில்லை. அதேசமயம், தேர்தல் முகமாக இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடிதான். எங்களது பணி என்ன என்பதை எங்களுக்கு கட்சி மேலிடம் சொல்லியுள்ளது. அதை நாங்கள் செய்து வருகிறோம்.. எத்தனை சீட் போட்டி என்பதெல்லாம் இப்போது கூற முடியாது. அதெல்லாம் பிறகு பேச வேண்டியவை என்று கூறினார் அண்ணாமலை.


தேர்தல் முகம் பிரதமர்தான் என்று கூறியதன் மூலம், தமிழ்நாட்டில் அதிமுகவில் யாருமே மக்களைக் கவர்ந்த தலைவராக இல்லை என்று அண்ணாமலை மறைமுகமாக இடித்துக் கூறியிருப்பதாக அதிமுக தரப்பு அதிருப்தி அடைந்துள்ளது. ஆக,மொத்தம் அமித்ஷாவைப் பார்த்தும் கூட சண்டைஓயவில்லை என்பதே இந்த Sunday-வில் நமக்குக் கிடைத்த செய்தி! 

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்