பாஜக கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் இருக்கும்.. நாங்க திமுக போல இல்லை.. அண்ணாமலை

Mar 16, 2023,11:58 AM IST

பெங்களூர்: திமுக கூட்டணி போல அதிமுக கூட்டணி கிடையாது. அதிமுக மிகப் பெரிய கட்சி. எங்களுக்குள் கருத்து பேதங்கள் இருக்கத்தான் செய்யும். திமுகவில் உள்ளதைப் போல எங்களது கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு வாய்ப்பூட்டு போடவில்லை.. எனவே கருத்துக்களை அவர்கள் சொல்ல உரிமை உண்டு என்று கூறியுள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.


அண்ணாமலை சமீபத்தில் மறைந்த ஜெயலலிதா, எம்ஜிஆர் குறித்துக் கூறிய கருத்துக்களுக்கு அதிமுக தரப்பிலிருந்து ஒவ்வொருவராக விமர்சித்து வந்தனர். குறிப்பாக ஜெயக்குமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்தனர். அதிலும் செல்லூர் ராஜு, அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை என்று கூறியிருந்தார். இருப்பினும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.



இந்த நிலையில் கர்நாடகத்திற்கு வந்திருந்த அண்ணாமலை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்தக் கருத்து பேதங்கள் குறித்து விளக்கினார். அப்போது அவர் கூறுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மூத்த கட்சி. எங்களுடைய கூட்டணி திமுக கூட்டணி போல கிடையாது. அங்கு கூட்டணிக் கட்சிகள் திமுக எது செய்தாலும், சொன்னாலும் ஆமாம் சாமி மட்டுமே போட வேண்டும். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எல்லோருக்கும் விதம் விதமான கருத்துக்கள் இருக்கும். அதை நாங்கள் முன்வைப்போம். 


பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையிலான கூட்டணி வலுவாக உள்ளது. எனது கட்சி வளர வேண்டும் என்பதே எனது முக்கிய இலக்கு.  எனவே பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எந்தத் தலைவர் குறித்தும் நான் நெகட்டிவாக பேச விரும்பவில்லை. ஒரு பகுதியில் பாஜக வளர்கிறது என்றால் அந்தப் பகுதியில் இதுவரை அது நடைபெற்றதில்லை. எனவே கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும். அது இயற்கை.


கடந்த 2 ஆண்டுகளாக சினிமா, மீடியா ஆகிய இரு துறைகளையும் திமுக கட்டுப்படுத்தி வந்துள்ளது. எதிர்க்கட்சிகளை அழிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்கிறார்கள். பாஜக அதை எதிர்த்துதான் போராடுகிறது. எங்களது கட்சி குறித்து பல பொய்களைச் சொல்கிறார்கள். அதை எதிர்கொண்டு பதிலடி கொடுக்க வேண்டியது எங்களது வேலை. அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம் என்று கூறினார் அண்ணாமலை.


சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்