அண்ணாமலை முதலமைச்சர் ஆவதெல்லாம் நடக்காத விஷயம்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Jan 18, 2024,09:42 AM IST

சென்னை: அண்ணாமலை முதலமைச்சர் ஆவது என்பது இலவு காத்த கிளி போலத்தான். அது நடக்காத விஷயம் என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறியுள்ளார்.


சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். 


எம்ஜிஆரின் 107வது பிறந்த நாள் என்பதால் 107 கிலோவில் பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது. கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டி விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.  விழாவில் அதிமுக முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். 




பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஆயிரத்தில் ஒருவராக போற்றப்படுகிறவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். உலகம் போற்றக்கூடியவர். அவர் நடித்த படத்தில் பல நல்ல கருத்துக்களை கூறினார். தற்போது அவ்வாறான கருத்துக்கள் எதுவும் இல்லை. 


அன்பு, நன்றி, கருணை கொண்டவர் மனித உருவில் உள்ள தெய்வம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அண்ணா வழியில் பேகிறவன் நான்.த மிழர்கள் என்றால் ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு என்பது வீரமும் காதலும்.  வீரம் இல்லாதவனும் தமிழன் இல்லை. காதல்  இல்லாதவனும் தமிழனும் இல்லை. 


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக ரஜினிகாந்த்தை அறிவிக்க இருந்ததாக துக்ளக் விழாவில் அதன் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்தது பற்றி பேசினார். அது, குருமூர்த்தி மற்றும் ரஜினி இடையே உரையாடல் நான்கு சுவர் கொண்ட அறைக்குள் நடந்தது. இந்த விவகாரம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்து தெரிவிக்கட்டும் அதன் பின்னர் நான் எனது கருத்தை கூறுகிறேன். 


நான் சொன்னேன் சொல்லலைன்னு ரஜினி சொல்லட்டும் அப்புறம் நான் சொல்றேன். நான்கு அறைக்குள் நடந்ததை நான் எப்படி அம்பலத்தில்  சொல்ல முடியும். நான் சொல்றேன் எது எப்படி இருந்தாலும் அண்ணாமலை முதலமைச்சர் ஆவது என்பது இலவு காத்த கிளி போலத்தான். அது நடக்காத விஷயம். தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட அம்மாவுடைய ஆட்சி தான் எடப்பாடி தலைமையில் மலரும் என்றார் ஜெயக்குமார்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்