சென்னை: லோக்சபா தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 38 தேர்தல் மேலாண்மை குழுக்களை அறிவித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை .
2024 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் ஏப்ரல் மாத வாக்கில் தேர்தல் வரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இப்போதே இதற்காக கட்சிகள் தயாராக ஆரம்பித்து விட்டன. திமுக, அதிமுக, பாஜக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
எல்லோருக்கும் முன்பாக தமிழ்நாட்டில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று கோவையில் நடைபெற்றது. இந்நிலையில் வரும் லோக்சபா தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 38 தேர்தல் மேலாண்மை குழுக்களை அண்ணாமலை அறிவித்துள்ளார்.
பாஜகவின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு தலைவராக சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். 38 குழுக்களின் விவரம் வருமாறு:
தேர்தல் நிர்வாகக் குழு, தேர்தல் அலுவலகம், கால் சென்டர், அலுவலக மேலாண்மை, புரோட்டோகால், மீடியா துறை, மீடியா உறவு, சட்ட விவகாரம், தேர்தல் ஆணையம், இலக்கிய தயாரிப்பு, இலக்கிய உரை அச்சிடுதல், பப்ளிசிட்டி மெட்டீரியல், பப்ளிசிட்டி மெட்டீரியல் - இலக்கிய விநியோகம், வாகனம், சுற்றுப்பயணம், விளம்பர பிரச்சாரம் (டிவி, எப்எம் ரேடியோ, தியேட்டர் விளம்பரங்கள் கேபிள் நெட்வொர்க், டிஜிட்டல் ஸ்கிரீன், பிரின்ட் மீடியா)
வீடியோ வேன்கள், ரிசோர்ஸ், கணக்கு விவகாரம், புள்ளிவிவரம், ஆவணங்கள், தேர்தல் அறிக்கை, குற்றப்பத்திரிகை, சோசியல் மீடியா -ஹைடெக் பிரசாரம், டிஜிட்டல் துறை, கலாச்சார பிரச்சாரம், தெரு கூட்டங்கள், கமர்ஷியல் -சோசியல், வெளிநாட்டு தொண்டர்கள், மகளிர் பிரச்சாரம், இளைஞர் பிரச்சாரம், எஸ்சி பிரச்சாரம், எஸ்டி பிரச்சாரம், ஜுக்கி ஜோப்டி பிரச்சாரம், சோசியல் சம்பார்க், லாபரதி சம்பார்க், பூத் பணி, பேசும் பொருட்கள், விஸ்தாரக் யோஜனா.
தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் எச். ராஜா இடம் பிடித்துள்ளார். மொத்தம் நான்கு பேர் கொண்ட இந்தக் குழுவில், எச். ராஜா, கே.பி ராமலிங்கம், கார்வேந்தன், ராம சீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பல்வேறு கட்சிகளும் ஓரிரு குழுக்களை அமைத்துள்ள நிலையில் தமிழ்நாடு பாஜக அதிரடியாக 38 குழுக்களை அமைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
{{comments.comment}}