சென்னை: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 25 லட்சம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவியின் குடும்பத்திற்குப் போதிய பாதுகாப்பு அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் புகாரின் பேரில் நடவடிக்கையில் இறங்கிய கோட்டூர்புரம் போலீஸார், ஞானசேகரன் என்ற நபரைக் கைது செய்துள்ளனர். ஞானசேகரை தவிர வேறு யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்று கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வழக்கறிஞர் வரலட்சுமி என்பவரின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கை தானாக முன்வந்து எடுத்து விசாரித்தது சென்னை உயர்நீதிமன்றம். வழக்கறிஞர் நீதிபதிகளுக்கு எழுதிய கடிதத்தில், போலீஸ் விசாரணையில் குறைபாடு இருப்பதாகவும், ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையிலும் sir என்ற சொல்லப்படும் நபர் யார், அவரது பின்னணி என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் எனவும் கூறி இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ க்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார் .
இதையடுத்து நீதிபதிகள் எம் எஸ் சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு இதை சுவோமோட்டா வழக்காக எடுத்துக் கொண்டது. நேற்று நடந்த விசாரணையின்போது பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியிருந்தனர். மேலும் விரிவான அறிக்கையை காவல்துறை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது பெஞ்ச்.
இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் விசாரணை அறிக்கையை சீல் வைத்த உறையில் சமர்ப்பித்தனர். அரசு தலைமை வழக்கறிஞர் பிஎஸ் ராமன் விளக்கமும் அளித்துள்ளார்.அதில் கூறப்பட்டிருந்த தகவல்கள்:
- பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான எஃப்ஐஆர் தானாகவே லாக் ஆகிவிடும். ஆனால் சிட்டிசன் போர்ட்டலில் 14 பேர் ஓடிபி யை பயன்படுத்தி தகவல் அறிக்கையை பார்த்துள்ளனர்.
- முதல் அறிக்கையை பார்த்த 14 பேர் விவரங்கள் உள்ளன. முதல் அறிக்கையை பார்த்த 14 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஐ பி சி யிலிருந்து பி என் எஸ் சட்டத்துக்கு மாற்றும் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெளியாகிவிட்டது.
- முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு காவல்துறை பொறுப்பல்ல. தேசிய தகவல் மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணம்.
- இதுவரை நடந்த விசாரணையில் ஒருவர் மட்டுமே குற்றவாளி என தெரிய வந்துள்ளதாக மட்டுமே காவல் ஆணையர் தெரிவித்தார்.
- சம்பவம் நடந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் செல்போன் ஏரோப்ளேன் மோடில் இருந்துள்ளது. தொடர்விசாரணையில் தான் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரியவரும்.
- குற்றவாளி வேறு ஏதேனும் செல்போன் வைத்திருந்தாரா என்பது விசாரணை நடைபெற்று வருகிறது.
- காவல்துறை அதிகாரிகல் அலுவல் ரீதியாக செய்தியாளர்களுக்குப் பேட்டிகள் அளிக்க அதிகாரம் உள்ளது. தனிப்பட்ட முறையில் மட்டுமே செய்தியாளர்களுடன் பேச அனுமதி கிடையாது.
அரசுத் தரப்பு பதிலை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அதுகுறித்து திருப்தி வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து சில உத்தரவுகளைப்
பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாக புகார் கொடுக்க முன்வந்தது பாராட்டுக்குரியது. இப்போதெல்லாம் காவல்துறையிடம் புகார் அளிக்க பொதுமக்கள் பயப்படும் நிலை உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்குத் தேவையான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 25 லட்சம் இடைக்கால நிாரண நிதியை அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாணவி தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திலேயே படிக்க வேண்டும். அவரது கல்விச் செலவு உள்ளிட்ட அனைத்தையும் அரசே ஏற்க வேண்டும். அவர் தொடர்ந்து அங்கு படிப்பதை அண்ணா பல்கலைக்கழகம் உறுதி செய்ய வேண்டும்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். சிறப்புக் குழுவை அமைக்கவும், அதில் அதிகாரிகள் சினேகப்பிரியா, ஜமான் ஜமால், பிருந்தா ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று தமிழ்நாடு அரசே முன்வந்து கூறியுள்ளது.
பாலியல் குற்றச் சம்பவங்களில் பெண்தான் குற்றம் சாட்டப்படுகிறார். அது குற்றவாளிக்கு சாதகமாகி விடும். தனிப்பட்ட முறையில் ஆண், பெண் பழகுவது தவறில்லை. அது அவர்களது உரிமை. ஆண் என்ற காரணத்தாலேயே பெண்ணைத் தொட உரிமை கிடையாது என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
{{comments.comment}}