அஞ்சலையம்மாள் நினைவு நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

Feb 20, 2025,04:14 PM IST

சென்னை: அஞ்சலையம்மாள் நினைவு நாளையொட்டி பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அஞ்சலையம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.


தவெகவின் கொள்கை தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாள் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார் தவெக தலைவர் விஜய்.  விஜய்யின் தவெக கட்சிக்கு தமிழக மக்கள் மற்றும் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. அது மட்டும் இன்றி மக்கள் மத்தியில் கட்சி குறித்த எதிர்பார்ப்பும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தவெக கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை விறுவிறுப்பாக செய்து முடித்த விஜய் தற்போது மாவட்ட நிர்வாகிகளின் நியமனம் குறித்த பட்டியலையும் வெளியிட்டுள்ளார். இது ஒருபக்கம் நடக்க, மற்றொருபக்கம் தமிழ் சினிமாவில் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்திலும் நடித்து வருகிறார். 




தமிழக வெற்றிக் கழக தொடங்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 2ம் தேதியுடன்  ஓராண்டு நிறைவடைந்த நிலையில், ஓராண்டு நிறைவையொட்டி கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்றி வைத்து கொள்கை தலைவர்களான அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோர்களின்  சிலையையும் திறந்து வைத்தார். அதேபோல் கட்சி ஓராண்டு விழாவை கொண்டாடும் விதமாக இந்த மாதம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். 


இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் உள்ள அஞ்சலையம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.படப்பிடிப்புத் தளத்திலிருந்து மதிய உணவு இடைவெளியின் போது தவெக அலுவலகம் வந்த விஜய், அஞ்சலையம்மாள் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி  மரியாதை செலுத்தினார். பிறகு மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு புறப்பட்டார். அஞ்சலையம்மாள் நினைவு நாளை முன்னிட்டு இன்று தவெக சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான ஏழை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுகளை வாங்கி சாப்பிட்டனர்.


இந்நிலையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் போராடிய எங்கள் கொள்கைத் தலைவர், விடுதலைப் போராளி, மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.


மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளோடு, அவர்களின் பாதுகாப்பையும் மீட்டெடுக்க உறுதி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்