சென்னை: நீட் தேர்வை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் என்பதால், இப்படத்தின் கதையை எழுதும் போதும்.. படத்தை எடுக்கும் போதும்.. எனக்கு எந்த பயமும் இல்லை.. படம் முடித்த பிறகு தான் நிறைய பேர் பயமுறுத்தினார்கள்.ஆனால் நாங்கள் சரியாக இருந்ததால் சென்சாரில் எந்த பிரச்சனையும் இல்லை. அஞ்சாமை என தலைப்பு வைத்துவிட்டு பயந்தால் எப்படி என இயக்குனர் சுப்புராமன் தில்லாக பேசியுள்ளார்.
தரமான படங்களை தேர்ந்தெடுத்து அப்படங்களை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியினை சரியாக செய்து வருகிறது ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம். அந்த வரிசையில் திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரிப்பில் உருவாகியுள்ள அஞ்சாமை படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நாளை உலகம் எங்கும் வெளியிட தயாராக உள்ளது.
கடந்த வருடம் பல இளைஞர்களின் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு தீர்வு சொல்லும் இறுகப்பற்று படத்தையும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம்தான் வெளியிட்டது. இப்படமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதேபோல் எஸ் பி சுப்பிராமன் இயக்கத்தில் அஞ்சாமை திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலச்சந்திரன் ஐஏஎஸ், உள்ளிட்ட பல நடித்துள்ளனர்.
இந்த நிலையில் அஞ்சாமை படம் நீட் தேர்வு மையப்படுத்தி உருவாக்கியுள்ளதால் இப்படம் நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறதா..? இல்லை எதிர்க்கிறதா..? என்பது குறித்த பல கேள்விகளுக்கு பதில் அளித்து இயக்குனர் சுப்புராமன் கூறியதாவது,
நீட் விஷயம் பற்றி பேசியிருப்பதால் பல பேர் விமர்சிப்பார்கள் என்றாலும் அவர்களைப் பார்த்து நான் எதற்கு பயப்பட வேண்டும். நான் உண்மையை பேசி இருக்கிறேன். உண்மையை பேசினால் யாருக்கு வலிக்கும் ? தப்பு பண்ணியவர்கள் தான் பயப்பட வேண்டும். இதைவிட பெரிய எதிர்ப்புகள் வந்தாலும் அதை பற்றி கவலை இல்லை. அஞ்சாமை என டைட்டில் வைத்துவிட்டு பயந்தால் எப்படி ? இந்த படத்தின் கதையை எழுதும்போதும், படத்தை எடுக்கும்போதும் எனக்கு எந்த பயமும் இல்லை.. படம் முடிந்த பிறகு நிறைய பேர் பயமுறுத்தினார்கள். ஆனால் நாங்கள் சரியாக இருந்ததால் சென்சாரில் எந்த பிரச்சனையும் எழவில்லை.
இந்த படத்தின் கதை மக்களிடம் சென்று சேருமா, சேராதா என்பது நம் கையில் இல்லை. மெனக்கெட்டு தான் இதன் திரைக்கதையை எழுதியுள்ளோம். காரணம் மக்களுக்கு இந்த படத்தின் மூலம் கருத்து சொல்லவில்லை. என்ன நிலைமையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், கொஞ்சம் திரும்பி பாருங்கள் என்று சொல்வது போலத்தான் உருவாக்கியிருக்கிறோம். இந்த கதையை விதார்த், வாணி போஜன் ஆகியோரை மனதில் வைத்து எழுதவில்லை. அந்த கதாபாத்திரங்களுக்கே உரிய உணர்வுடன் இந்த கதையை எழுதி விட்டு அதற்கு பொருத்தமானவர்களை தேடிய போது இவர்கள் இருவரும் சரியான தேர்வாக இருந்தார்கள்.
இந்த படத்தின் காட்சிகள் பெரும்பாலும் வலி நிறைந்ததாக இருக்கும். நான் கதை சொல்லும்போது யாராவது அழுதால் அதை பார்த்து நான் சிரித்து விடுவேன். இதற்கெல்லாம் அழுகிறார்களே என்று. ஆனால் மற்றவர்களுக்கு நான் கதை சொல்லும்போது எனக்கே அது பலமுறை நடந்தது. படப்பிடிப்பில் கூட விதார்த்தை வைத்து காட்சிகளை படமாக்கும்போது அவருடைய கதாபாத்திரத்திற்குள் நானும் சென்று விடுவேன். உடனடியாக அடுத்த ரகுமான் சாரை வைத்து காட்சிகளை எடுக்க வேண்டும் என்றால் அதிலிருந்து வெளியே வருவதற்கு சிரமமாக இருக்கும்.
பெரிய ரேஸில் ஓடுகிறவர்கள் ஓடட்டும், நான் தோட்டத்துக்குள்ளேயே ஒரு ஓரமாக ஓடிக்கொள்கிறேன் என விதார்த் சொல்வது அவரது தன்னடக்கம். ஆனால் அங்கே ஓடுகிறவர்களால் இங்கே ஓட முடியாது. இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை. அந்த அளவிற்கு இந்த படத்தில் வித்தியாசமாக, ஆழமாக நடித்துள்ளார் விதார்த். ஒரு குணச்சித்திர கதாபாத்திரம் மாதிரி பண்ணுவதற்கு இங்கே ஆளில்லை, நீங்கள் பாலிவுட் லெவலில் போக வேண்டியவர் என விதார்த்திடம் நானே கூறி இருக்கிறேன். ஆஞ்சநேயருக்கு அவரது பலம் தெரியாது என்று சொல்வார்கள். அதுபோல தான் விதார்த்திற்கும் அவரது பலம் தெரியவில்லை என கூறியுள்ளார்.
பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி
வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?
வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!
14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!
மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!
Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!
{{comments.comment}}