சென்னை: டாப் ஸ்டார் பிரசாந்த்தின் நடிப்பில் வெளியான அந்தகன் திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது. கண் தெரியாதவராக நடித்துள்ள நடிகர் பிரசாந்தின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் கனவு நாயகனாக வலம் வந்த நடிகர் பிரசாந்த் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தகன் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் இயக்கி உள்ளார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதில் பிரியா ஆனந்த், சிம்ரன், வனிதா விஜயகுமார், கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, சமுத்திரக்கனி, நவரச நாயகன் கார்த்திக் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான திரைப்படம் அந்தாதூன். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது. குறிப்பாக இப்படம் 3 தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்தது. இது பின்னர் மலையாளத்தில் ரீமேக் ஆனது. தற்போது தமிழில் அந்தகன் என்ற பெயரில் வந்துள்ளது. படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இப்படம் இன்று வெளியானது. முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்கள் மேளதாளத்துடன் வரவேற்று பாலாபிஷேகம் செய்து கொண்டாடி மகிழ்ந்தனர். தியேட்டர்களில் திருவிழாக் கோலம் காணப்பட்டது. இப்படத்தில் கண் தெரியாத பியானோ கலைஞராக நடித்துள்ளார் பிரஷாந்த். அவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது. படம் முழுக்க அவரது நடிப்பு, இசை, பாடல்கள், கதை, மேக்கிங் என எல்லாமே நன்றாக இருப்பதாக பாசிட்டிவான ரெவ்யூக்கள் வர ஆரம்பித்துள்ளன.
அதேபோல ஆரம்பக் காட்சியை பார்த்தால் மட்டுமே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி புரியும். அதனால் படம் பார்ப்பவர்கள் படத்தின் முதல் காட்சியை மிஸ் பண்ணாமல் பாருங்கள். படத்தில் சின்ன வீடாக நடித்திருக்கும் சிம்ரனின் நடிப்பு வேற லெவல் என அந்தகன் படத்தைப் பற்றி பாசிட்டிவ்வான விமர்சனங்களை ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!