திருப்பாவை பாசுரம் 22 .. "அங்கண் மாஞாலத் தரசர் அபிமான"

Jan 07, 2024,09:16 AM IST

திருப்பாவை பாசுரம் 22 :


அங்கண் மாஞாலத் தரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

சங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்;

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே,

செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்,

அங்கணி ரண்டும் கொண்டு எங்கம்மேல் நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.  




பொருள் :


தாங்களே பெரிய வீரர்கள் என பெருமை பேசும் இந்த உலகத்தில் உள்ள அரசர்கள் அனைவரும், உன்னை விட சிறந்தவர் யாரும் இல்லை என்பதை உணர்ந்து இங்கு வந்து, நீ சயனித்திருக்கிற கட்டிலின் கீழே சற்சங்கம் கேட்பதற்காக ஆவலுடன் காத்திருக்கும் அடியார்களை போல காத்திருக்கிறார்கள். அதே போல் உன்னுடைய அருளை பெறுவதற்காக நாங்களும் காத்துக் கிடக்கிறோம். சிறிய மணி போன்று வாயை உடையவனே! தாமரை மலர் போல சிவந்த உன்னுடைய கண்களை மெல்ல திறந்து, உன்னுடைய அருட்பார்வையை எங்கள் மேல் செலுத்து. சந்திரனும், சூரியனும் ஒரே நேரத்தில் தோன்றியது போல் ஒளி வீசும் உன்னுடைய இரு கண்களை வைத்து எங்களை கொஞ்சம் பார். அப்படி நீ தரும் சிறிய பார்வையால் எங்களுடைய சாபங்கள், பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும். அதனால் இன்னும் எங்களைக் காக்க வைக்காமல் நீ உடனடியாக எழுந்து கொள்.


விளக்கம் : 


கண்ணனின் முக அழகை வர்ணித்து பாடும் ஆண்டாள், திருமாலின் கடைக்கண் பார்வை பட்டு விடாதா என் உலகத்தில் உள்ள அனைவரும் ஏந்தி காத்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆண்டாள், கண்ணனை குழந்தையாக நினைத்து அன்பு செய்வதால், கண்களை திறப்பு கூட மெதுவாக சிறிது சிறிதாக திறக்கும் படி கேட்கிறார். சூரியனும், சந்திரனும் ஒரே நேரத்தில் தோன்றிவதை போல  என ஆண்டாள் ஒரு வரியை குறிப்பிட்டுள்ளார். இதை இரண்டு விதமாக பொருள் கொள்ள முடியும். ஒன்று, சூரியன் - சந்திரன் இணைந்து வந்தது போல் கண்ணனின் முகம் ஒளிமயமாக இருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். மற்றொன்று,சூரியன் - சந்திரன் நேராக சந்தித்து கொள்ளும் நாளே அமாவாசை ஆகும். இது கண்ணனின் கருமை நிறத்தை குறிப்பதற்காகவும், அமாவாசை போன்ற இருளை நீக்கக் கூடியவனே என குறிப்பிடும் வகையிலும் ஆண்டாள் இந்த பாடலை அமைத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. பர்ஸ்ட் பேட்டிங் மாமே.. கேப்டன் தோனி மாஜிக்குக்காக ரசிகர்கள் வெயிட்டிங்!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்