ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 17 - அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்

Jan 02, 2024,08:41 AM IST

திருப்பாவை பாசுரம் 17 :


அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்;

கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!

எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்;

அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த

உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்;

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.




பொருள் :


ஆயர்பாடியில் இருக்கும் அனைவருக்கும் தண்ணீரும், சோறும் அளவு இல்லாமல் கொடுத்து, தான தர்மம் பல செய்யும் எங்களுக்கு தலைவனாக இருக்கும் நந்தகோபாலரே எழுந்திருங்கள். வீரம் மிகுந்த குலத்தில் உதித்த குல விளக்கு போன்றளே. எங்களின் தலைவியாகிய யசோதையே எழுந்திருங்கள். மண்ணில் உள்ளனவர்களை வெற்றி கொண்டது மட்டுமின்றி விண்ணை சேர்த்து அளந்த தேவர்களுக்கு எல்லாம் தேவராக இருக்கக் கூடிய கண்ணனே உறங்காமல் எழுந்திருங்கள். தங்கத்தை போன்ற மின்னும், சிவந்த பாதங்களை உடைய பலராமரே நீங்களும் உங்கள் தம்பியும் இப்படி உறங்கிக் கொண்டிருப்பது சரியா? எழுந்திருங்கள். எழுந்து வந்து எங்களுக்கு அருள் செய்யுங்கள்.


விளக்கம் : 


முதலில் ஆயர்பாடியில் இருக்கும் தோழிகளை எழுப்பி பாவை நோன்பு பற்றி கூறி, அதை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கூறி, கண்ணனின் பெருமைகளை சொல்லி, கண்ணனை போற்றி பாட வாருங்கள் என அழைத்தாள் ஆண்டாள். தோழிகளை  எழுப்புவதோடு நின்று விடாமல் கண்ணனின் வீட்டிற்கே சென்று, அங்குள்ள காலவாளியை எழுப்பி, வீட்டிற்கு சென்று, அங்கு தூங்கிக் கொண்டிருக்கும் நந்த கோபாலன், யசோதா, பலராமர், கண்ணன் என கண்ணனின் வீட்டில் உள்ள அனைவரையும் எழுப்புகிறாள். கண்ணனின் பெருமை பாடும் ஆண்டாள் தன்னுடைய திருப்பாவை பாடல்களில் திருமாலின் அவதாரங்களையும் போற்றி பாடி உள்ளார். திருப்பாவையின் 3 பாடல்களில் வாமன அவதாரத்தை போற்றி பாடி உள்ளார். திரிவிக்கிரமனாக உயர்ந்து மூன்று உலகங்களையும் அளந்தவனே என திருமாலை போற்றி பாடுகிறாள். பக்தியின் ஆணவம் இருக்கக் கூடாது என்பதை எடுத்துக் காட்டவே மாபலி சக்கரவர்த்திக்காக பெருமால் எடுத்த வாமன அவதாரத்தை ஆண்டாள் போற்றி பாடி உள்ளார்.


சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்