ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 04 - ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்

Dec 20, 2023,07:59 AM IST

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என கீதையில் கண்ணன் குறிப்பிடுகிறார். தேவர்களின் விடியற்காலை நேரமான மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி, பாவை நோன்பிருந்து, ஆண்டாளின் திருப்பாவை பாடி, பெருமாளை வழிபட்டால் வாழ்வில் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும். திருமாலின் பெருமைகளை இனிக்கும் தமிழில் 30 பாடல்களாக பாடி உள்ளார் ஆண்டாள் நாச்சியார்.


திருப்பாவை பாசுரம் 04 :




ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து

பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் 

ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.


பொருள் : 


கடல் நீரை முழுவதும் தனக்குள் மழையாக வைத்திருக்கும் மழை தெய்வமே, உன்னை போன்று கருமையான நிறம் கொண்ட எங்களின் தலைவனாகிய கண்ணனிடம் உன்னிடம் உள்ள மழை அனைத்தையும் கொடுத்து விடு. வலிமையான தோள்களை உடைய எங்கள் நாயகன் கையின் இருக்கும் சக்கரத்தை போல் மின்னல்கள் தெறித்தோட, அவரது மற்றொரு கையில் இருக்கும் வலம்புரி சங்கினை போல் இடி முழங்கி, அவரது கையில் இருக்கக் கூடிய சாரங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் சரம் சரமாக, இந்த உலகத்தவர்கள் அனைவரும் வாழுவதற்கு தேவையான மழையை எங்கள் கண்ணன் வழங்குவார். அந்த தண்ணீரால் நிறைந்த நீர்நிலைகளில் நாங்களும் மார்கழியில் நீராடி மகிழ்ச்சியாக எங்கள் கண்ணனை பாடி பணிவோம்.


விளக்கம் : 


கண்ணனே உலகம் அனைத்திற்கும் தலைவன். அனைத்து செயல்களுக்கும் காரணமானவன் என்பதை இந்த பாடலில் கூறும் ஆண்டாள், திருமாலின் திருக்கரங்களில் இருக்கும் ஆயுதங்களின் பெருமைகளையும் குறிப்பிட்டுள்ளார். உலக உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக இருப்பது நீர். அந்த நீரை தருவது மழை. அந்த மழை அனைத்து இடங்களிலும் சமமாக பெய்ய வேண்டும். ஒரு பகுதிக்கு மட்டும் கிடைப்பதில் என்ன பயன் இருக்க போகிறது? அதே போல் தான் இறைவனின் அருளும். அனைவருக்கும் இறைவனின் அருள் கிடைக்க வேண்டும். அந்த பக்தி என்னும் குளத்தில் ஆனந்தமாக நீராடி, இறைவனை அடைய வேண்டும் என்ற கருத்தை இந்த பாடலின் மூலம் விளக்கி உள்ளார் ஆண்டாள்.

சமீபத்திய செய்திகள்

news

LPG Cylinder price hike: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!

news

சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல்: டாக்டர் ராமதாஸ்

news

சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

தமிழக அரசியலில் தனிப்பெரும் தலைவராக சீமான் திகழ்கிறார்: பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்!

news

வங்கக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

news

இது ஏப்ரல் மாதமாகவே இருக்காது.. கூலான கோடையாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை.. வெதர்மேன் அப்டேட்!

news

மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

news

மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டுவதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்