சென்னை: அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் ஆன்மீக தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பரபரப்பைக் கிளப்பிய அன்னபூரணிக்கு 3வதாக திருமணம் நடைபெறவுள்ளது. இதை அவரே அறிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்தான் அன்னபூரணி. இளம் வயதிலேயே சென்னைக்கு வந்து விட்ட அவருக்கு முதலில் ஒரு திருமணம் நடந்தது. அந்தத் திருமண வாழ்க்கையில் அவருக்கு ஒரு மகளும் பிறந்தார். ஆனால் கணவருடன் ஏற்பட்ட பிணக்கினால் குடும்ப வாழ்க்கை கசந்தது. இந்த நிலையில்தான் அரசு என்பவரைச் சந்தித்தார். இருவரும் வாழ்க்கையில் இணைய முடிவு செய்தனர்.
ஆனால் முதல் கணவர் அதற்கு பிரச்சினை செய்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியிலும் கூட வெடித்தது. அதன் பிறகு தனது மகளுடன் முதல் கணவரை விட்டுப் பிரிந்து வந்த அன்னபூரணி அவரை விவாகரத்து செய்து விட்டு அரசுவுடன் வாழ ஆரம்பித்தார். ஆனால் இந்த வாழ்க்கையும் அவருக்கு நிலைக்கவில்லை. 2019ல் அரசு மரணமடைந்தார்.
அதன் பிறகு ஆன்மீகத் தலைவராக அவதாரம் எடுத்தார் அன்னபூரணி. தனது பெயரை அன்னபூரணி அரசு அம்மா என்று அறிவித்துக் கொண்டார். அவரது வீடியோக்கள் வைரலாகின. பலர் டிரோல் செய்தார்கள். கிண்டலடித்தார்கள்.. அதுவே அவருக்கு நல்ல விளம்பரமாக அமைந்ததால் பிரபலமானார். இடையில் சிறிது காலம் அமைதியாக இருந்து வந்த அன்னபூரணி தற்போது மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.
ஆமாம், மீண்டும் மணக்கோலம் பூணவுள்ளார் அன்னபூரணி. தனக்காக தன்னுடைய வாழ்க்கையை ஆன்மீகத்திற்கு அர்ப்பணித்த ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம் அன்னபூரணி. திருமணம் செய்யப் போவதாலோ என்னவோ உடல் எடையையும் கூட குறைத்து கொஞ்சம் ஸ்லிம்மாக மாறியுள்ளார் அன்னபூரணி. தனது திருமண அறிவிப்பை பேஸ்புக்கில் போட்டுள்ளார்.
அதில், நவம்பர் 28, 2024 அன்று அரசுவின் இன்னொரு அத்தியாயம் ஆரம்பம். அதாவது அரசுவின் அடுத்த பரிணாமம் ஆரம்பம்.
அப்பாற்பட்ட சக்தி என்னை இயக்கினாலும் சமுதாயத்தின் பார்வையில் தனி ஒரு பெண்ணாக இருப்பதால் எனக்கு ஏற்படும் இடையூர்களால் என் பாதுகாப்பு கருதியும் சமுதாயத்தினால் எனக்கு எந்த ஒரு தொந்தரவும் இன்றி என்னுடைய ஆன்மீக சேவையை சுதந்திரமாக செய்யவும் என்னுடைய நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள எந்த ஒரு சுயநலமும் இன்றி விருப்பு வெருப்பின்றி அர்பணிப்பு உணர்வுடன் என்னுடைய அருளை உலக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதற்கும், நானும் அரசுவும் திருமணம் செய்து கொண்ட நாளான அதே நவம்பர் 28 ல், நான் என்னுடைய ஆன்மீகத்திற்காக தன்னை அர்பணித்த ரோகித்தை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அறிவிக்கிறேன்.
அன்றைய தினத்தில் விருப்பம் உள்ளவர்கள் அரசுவின் அடுத்த பரிணாம நிகழ்வில் கலந்து கொண்டு ஆசிர்வாதம் வாங்கி செல்லவும்.
என்னை தேடி வரும் மக்கள் அனைவருக்கும் உங்கள் அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்து நீங்கள் கேட்பது அனைத்தும் கிடைக்க செய்து உங்களை உங்கள் குடும்பத்துடன் கொண்டாட வைப்பதற்கு அளப்பறிய சக்தியுடனும் அளப்பறிய அருளுடனும் உங்களுக்காக வீற்றிருக்கும் உங்கள் அன்பு அன்னை.
மக்களுக்கு அருளாசி வழங்குவதை சேவையாகதான் செய்து கொண்டு இருக்கிறேன். இனிமேலும் என்னுடைய உடல் இந்த பூமியில் இருக்கும் வரை சேவையாகதான் செய்வேன். சத்தியத்திற்கு மட்டும் கட்டுபட்டு சத்தியம் என்னை எப்படி இயக்குகிறதோ அதன்படி மட்டுமே இயங்குவேன் என்று கூறியுள்ளார் அன்னபூரணி.
தானும் ரோஹித்தும் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் அன்னபூரணி. அதில் பட்டுச் சேலையில் ஜொலிக்கிறார். கூடவே, ரோஹித்தும் வெட்கப் புன்னகையுடன் அருகில் இருக்கிறார்.
புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகள் சொல்லுங்க மக்களே!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}