ஒரே இரவில் நடக்கும் திரில்லர்.. "எக்ஸிட்".. படம் முழுக்க முழுக்க.. பஞ்சமில்லாத "திடுக் திடுக்"

Jan 20, 2024,02:53 PM IST

சென்னை: பசங்க புகழ் ஸ்ரீராம் நடித்த எக்ஸிட் திரைப்படம் ஒரு இரவில் நடக்கும் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. படம் முழுக்க திடுக் திடுக் காட்சிகளுக்கு கொஞ்சமும் குறைவே இருக்காதாம்.


இப்படம் பிப்ரவரி இரண்டாம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 2009 ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் பசங்க படம் வெளிவந்தது. இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான்  

ஸ்ரீ ராம். இப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது.


குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்ற அணுகுமுறையின் மூலம் இப்படம் மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படத்தின் மூலம் நடிகர் மாஸ்டர் ஸ்ரீராம் பலரது பாராட்டைப் பெற்று, தேசிய விருதையும் வென்றார். இதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு கோலி சோடா என்ற படத்தில் முன்னணி நாயகர்களில் ஒருவராக, இளம் நாயகனாக வலம் வந்தார்.




அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து பாபநாசம் படத்தில் நடித்து பிரபலமானவர். கமல்ஹாசனால் பாராட்டவும் பட்டார்.  தற்போது ஸ்ரீராம் நாயகனாக நடித்துள்ள எக்ஸிட் படம் அவருக்கு அடுத்த புரமோஷனைத் தரும் என்று திரையுலகில் சொல்கிறார்கள். 


இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷாஹீன் இயக்கியுள்ளார். ப்ளூ இன்டர்நேஷனல் சார்பில் இப்படத்தை வேணு கோபாலகிருஷ்ணன் தயாரித்துள்ளார். இதில் ஸ்ரீராம், விஷாக் நாயர், ரனிஷா ரகுமான், ஹரிஷ், பெராடி,  வைஷாக் விஜயன்,  ஆஸ்லின் ஜோசப், சூரஜ் பாப்ஸ், ஸ்ரீ ரியாஸ்  மற்றும் பலர் நடித்துள்ளனர்.


நடிகர் ஸ்ரீராம் எப்போதும் நடிப்புக்கு முக்கியத்துவம் தருபவர். அவரது நடிப்பாற்றலுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ளது. படத்தின் வில்லனாக விஷாக் நாயர் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே மம்முட்டி படத்தில் வில்லனாக நடித்தவர். அதில் மிகக் கொடூர வில்லனாக களமிறங்கி அசத்தியிருப்பார். 




ஜெயிலர் படத்தில் வரும் வில்லன் விநாயகன் மிகக் கொடூர வில்லனாக நடித்து மிரட்டி இருப்பார். அதில் இவருடைய ரோல் பிரபலமாக பேசப்பட்டது. அதுபோல எக்ஸிட்  படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விஷாக் நாயர் ஒரு மிருகத்தைப் போல தம் உடல் அசைவுகளால் நான்கு கால்களில்தான் நடப்பாராம். இதில் பேசவே மாட்டாராம். ஆனால் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவாராம். மனித மாமிசத்தை கடித்து உண்ணுவது போன்ற தனது கொடூர செயல்களை தத்ரூபமாக நடித்து மிரட்டி இருக்கிறாராம். இவருடைய தோற்றமும், உடல் அசைவும் அசல் மிருகத்தைப் போலவே இருக்குமாம்.


எக்ஸிட் படம் ஒரு நாள் இரவில் நடக்கும் கதை. இது ஒரு சர்வைவல் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. எக்ஸிட் என்றால் வெளியே செல்லும் வழி. அதுபோல உயிர்ப்பலி கேட்கும் ஒரு ஆபத்தான சூழலில் இருந்து தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள நாயகன் எப்படி வெளியே செல்கிறான் என்பது தான் இப்படத்தின் மையக்கதையாக உள்ளது.


இந்நிலையில் தமிழில் திரில்லர் படங்கள் நிறைய வந்தாலும் அவற்றில் ஒரு சில படங்கள் மட்டுமே ஜாலியான கதைக்களத்தில் அமைந்திருக்கும். ஆனால் இந்தப் படம் முழுக்க முழுக்க சீரியஸாக இருக்குமாம். எக்ஸிட் படத்தில் வரும் திரில்லர் காட்சிகள் கடைசி வரையும் வரையிலும் சுவாரஸ்யம் குறையாமல் திர்லர் படமாக இருக்குமாம்.


இப்படம் பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியிடப்படவுள்ளது. இதே மாதத்தில் மம்முட்டி நடித்த பிரம்மயுகம் படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என படக் குழுவினர் நம்பிக்கை வைத்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

Cyclone Fengal.. 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. தேவையின்றி வெளியில் வராதீர்கள்

news

Cyclone Fengal to cross near Puducherry.. யாருக்கெல்லாம் நாளை ரெட் அலர்ட்?.. IMD Chennai Update

news

Cyclone Fengal வருது.. இருந்தாலும் தயாரா இருங்க.. அப்டேட் பண்றோம்.. ஷாக் கொடுத்த சென்னை பள்ளி!

news

கனமழை எதிரொலி.. அரும்பாக்கம், செயின்ட் தாமஸ் மெட்ரோ நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிருங்கள்!

news

ஃபெஞ்சல் புயல்.. 2024ம் ஆண்டில்.. வங்கக் கடலில் பிறந்த 3வது புயல்.. வட கிழக்கு பருவ காலத்தில் 2வது!

news

Cyclone Fengal.. வங்கக் கடல் ஆழ்ந்த காற்றழுத்தம்.. ஃபெஞ்சல் புயலாக மாறியது.. நாளை கரையைக் கடக்கும்

news

ஃபெஞ்சல் புயல்.. ரெட் அலர்ட் மாவட்டங்களில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர் தகவல்

news

Red alert: தமிழகத்தில் அதி கன மழை எச்சரிக்கை.. இன்றும் நாளையும் ரெட் அலர்ட் அறிவிப்பு

news

சென்னையில்.. இன்று மாலை முதல் ஞாயிறு காலை வரை மிக கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்

அதிகம் பார்க்கும் செய்திகள்