The Love of Coffee.. அழகிய மழை நேரமும்.. ஒரு கோப்பைக் குளம்பியும்.. பின்னே நானும்!

Dec 13, 2024,01:30 PM IST

- சண்முகப்பிரியா


காபி.. இது ஒரு வார்த்தை இல்லை ஒரு உணர்வு என்று தான் சொல்ல தோன்றுகிறது. அந்த அளவு எனக்குள் கலந்த ஒரு உணர்வுத் திரவம்.. இந்த குளம்பி.. குளம்பின்னதும் குழம்பிடாதீங்க.. காபிக்கு சுத்தமான தமிழ்ப் பெயர்தான் இந்த குளம்பி. ஹே குளம்பி யே உன்னை பற்றி நான் எழுதிய போது என் தமிழ் மொழியும் உன் மீது காதல் கொண்டது.. !


காபியைப் பருகும் விதமே ஒரு  விதமான அலாதி இன்பம். வார்த்தைகள் போதவில்லை அதை விவரிக்க.  காபி வாசம் அது நம்மை மற்றும் நம் மனதை மயக்கும் சக்தி.. அதற்கு மட்டும் தான் உண்டு. இந்த அளவு நம்மை அதன் மணத்தால் வசியம் செய்து விடும். சரி அதை விடுங்க.. இந்த காபியை எப்படிப் பருக வேண்டும் தெரியுமா.. அந்த ரகசியத்தைச் சொல்றேன் வாங்க.. !




கோப்பையை கையில் எடுக்கும் விதத்திலிருந்து காபி பரும் கலை தொடங்குகிறது. சிறு குழந்தையை தூக்குவது போன்று மென்மையாக அந்த கோப்பையை கையில் எடுத்து உதடுகள் அருகில் கொண்டு வந்து முதலில் அதன் மணத்தை உணர வேண்டும். காபியை குடிப்பதற்கு முன்பு அதன் வாசனையை நுகர வேண்டும்.. சுடச் சுட ஆவி பறக்கும் காபியை மூக்கிற்கு அருகே வைத்து வாசம் பிடித்து விட்டு பின்னர் அதைப் பருக உதடுகள் அருகில் கொண்டு வரும் போது வரும் உணர்வு இருக்கே.. அடடா அச்சச்சா.. (மனதிற்கு பிடித்தவருக்கு) தரும் முதல் முத்தம் எப்படி சுவைக்குமோ.. அந்த உணர்வு கிடைக்கும். 


காபியின் அந்த வாசனையை நுகரும்போது முகத்தில் பரவும் உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகள் போதவில்லை..... அப்படி ஒரு புத்துணர்ச்சி வரும் உணர்வு அது. அதன் பிறகு உதடுகள் அருகில் வைத்து சிறிது சிறிதாக உறிஞ்சி குடிக்க வேண்டும். அப்போது தான் ஏதோ காற்றில் மிதந்து கொண்டு இருப்பது போல் ஒரு உணர்வு தோன்றும். அந்த ஒரு உறிஞ்சுதல் நம் வலி வேதனை என்று எல்லாம் மறக்க வைத்து விடும் (மந்திர)சக்தி இந்த காபிக்கு மட்டும் உண்டு. இது தரும் அரவணைப்பு வேறு எதிலும் இல்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது. 


முதல் பருகுதல் அப்படியே நம்மை வேறு உலகத்தில் கொண்டு போய் விடும். தனியாக காபியைப் பருகும்போது கிடைக்கும் இன்பம் ஒன்றென்றால் கூட இருப்பவர்களைப் பொறுத்து அந்த அனுபவம் வேறுபடும். பருகும் நபர்களைப் பொறுத்து உணர்வும் வேறுபடும். நண்பர்களுடன் என்றால் அது ஒரு வித மகிழ்ச்சி. மனதிற்கு நெருக்கமானவர்களுடன் பருகும் போது கிடைக்கும் உணர்வு வேறு ரகமாக இருக்கும். 


இருவரும் இணைந்து அமர்ந்து பருகும்போது காபியுடன் சேர்த்து அன்பும் தானாக பரிமாறப்படும்.அதன் வாசம் விட நெருக்கமான உறவின் வாசம் உணரும் நேரம் இது. காபியுடன் வார்த்தைகளும் பகிரப்படும் நேரம் அது. வீட்டு மகாராணிகளுக்கு அதாங்க இல்லத்தரசிகளுக்கு வேலையெல்லாம் முடித்து விட்டு அக்கடா என்று உட்கார வாய்க்கும்போது சூடாக கிடைக்கும் காபி.. சொர்க்கம்ங்க.. அவளது சோர்வு, குமைச்சல், அசதி, வலி இப்படி எல்லாவற்றையும் அப்படியே துடைத்தெறிந்து, அரவணைப்பு தந்து ஆறுதல் தரும் ஒரு சுகமான பானம் காபி. 


எல்லா வேலைகளையும் முடித்து அவள் காபியை கோப்பையில் ஊற்றி நிறுத்தி நிதானித்து பருகும் விதம் ஒரு அழகு தான்.... அதில் அவள் அடையும் இன்பம் வேறு எதிலும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு இன்பம் தரும் காபி தயாரிக்கும் முறை கூட ஒரு வகை கலை தான். வெள்ளை நிற தேவதையான பாலை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின்னர் கொதிநீரில் பக்குவமாக கொதித்து கொண்டு இருக்கும் காபி டிகாக்ஷனை ஊற்றி கலந்து அளவான சீனி அல்லது கருப்பட்டியைக் கலந்து பக்குவமாக குடிக்க வேண்டும். 


டீக்கு ஒரு குரூப் அடிமை என்றால் இந்த காபிக்கு ஏகப்பட்ட பேர் போதையாகிக் கிடக்கின்றனர். காபியை ஏன் இந்த அளவு காதல் செய்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அது தரும் உணர்வுகளும், கிளர்ச்சியும் வேற லெவல். மனசுக்குள் மகிழ்ச்சி அலைகள் வீசும், காபியைக் குடிக்கும் போது. நாமாக போட்டு சாப்பிடுவதை விட, மனதிற்கு பிடித்தவர்கள் போட்டுத் தரும் போது இன்னும் கூடுதலாக அதன் சுவையை அனுபவிக்க முடியும். அந்த சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. 


குளம்பியின் காதலி நான்.... என்னுடைய காதலி குளம்பி.....!


நீங்களும் உங்களோட காபி அனுபவத்தைச் சொல்லுங்களேன்.. கேட்போம்.


(கட்டுரையாளர் சண்முகப்பிரியா, தென்தமிழ் இணையதளத்தின் வாசகி)

சமீபத்திய செய்திகள்

news

சீனாவில் மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. வவ்வாலிலிருந்து மனிதர்களுக்கு பரவுமாம்!

news

2000 கோடி அல்ல.. 10000 கோடியே கொடுத்தாலும் சரி.. கையெழுத்துப் போட மாட்டோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பிரதமர் நரேந்திர மோடியின்.. முதன்மைச் செயலாளரானார்.. சக்திகாந்த தாஸ்.. ஓய்வுக்குப் பின் புதுப் பதவி!

news

தான் யார்.. எதற்காக வந்தோம் என்பதே கமல்ஹாசனுக்குப் புரியலையே.. தவெகவின் அதிரடி தாக்கு!

news

பிப்., 26ல் தவெகவின் ஆண்டு விழா.. 2000 பேருக்கு மட்டும் தான் அனுமதி..!

news

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா vs பாகிஸ்தான்.. நாளைக்கு ஜெயிக்காம விட்ரக் கூடாதுடா பரமா!

news

அனல் பறக்கும் பேச்சாளர்.. அதிரடி டிபேட்டர்.. நாம் தமிழர் கட்சியின் அடையாளம்.. யார் இந்த காளியம்மாள்?

news

தங்கச்சி காளியம்மாள் விலகுவதாக இருந்தால் விலகிக்கலாம்.. ரொம்ப நன்றி என்று சொல்வோம்.. சீமான்

news

சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள்.. நாம் தமிழர் கட்சிக்கு முழுக்கா?.. பரபரக்கும் இன்விடேஷன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்