- செல்ல லட்சுமி
சென்னை: டைட்டிலையும், கூடவே போட்டோவையும் பார்த்ததும் லைட்டா குழம்பிட்டீங்களா.. ரெமோ சிவகார்த்திகேயனோன்னு நினைச்சுடீங்களா. அதாங்க இல்ல. இது நம்ம "துரையம்மா" தான்!
அட இன்னுமா புரியலை.. நம்ம எமி ஜாக்சன்தாப்பா இது.. என்னாது எமியா.. ஏமிரா இதி.. நம்பவே முடியலையே!.. வாங்க பாஸ் தொடர்ந்து படிக்கலாம்.
மதராச பட்டினம் படத்தில் துரையம்மாவா வந்து திரையுலகையே கலக்கி விட்டுப் போனவர்தான் நம்ம எமி ஜாக்சன். இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் தமிழ்த் திரை ரசிகர்களால் முதல் படத்திலேயே வசீகரிக்கப்பட்டு பாராட்டையும் பெற்றவர். அதன் பின்னர் ஐ உள்ளிட்ட சில படங்களில் இவரது நடிப்பு பேசப்பட்டது. பின்னர் அப்படியே காணாமல் போய் விட்டார்.
இப்போது நம்ம எமி ஜாக்சன் டிரான்ஸ்பர்மேஷன் பத்திதான் உலகமே பேசுது. அப்படி என்ன நம்ம துரையம்மா பண்ணிடாங்க?
எமி ஜாக்சனா இது அப்படினு மூக்கு மேல விரல் வைக்குற அளவுக்கு டிரான்ஸ்பர்மேஷன் ஆகியுள்ளார் எமி ஜாக்சன். உங்க வீட்டு மேக்கப் எங்க வீட்டு மேக்கப் இல்லைங்க.. ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார்... துரை "அம்மா"வா .. இல்லை "துரை அய்யா"வானு தெரியாத அளவுக்கு அப்படி ஒரு கெட்டப் சேஞ்ச்.
தலைமுடியை ஒட்ட வெட்டி வேற லெவலில் உருமாறியிருக்கிறார் எமி ஜாக்சன். பலரும் இந்த கெட்டப் சேஞ்ச்சை வைத்து ஓட்டி வருகின்றனர். பாஸ் பாஸ் இது எமி ஜாக்சன் இல்லை.. ஓப்பன்ஹைமர் நடிகர் சிலியன் மர்பி என்று பலர் கலாய்த்துள்ளனர். 3 நிமிஷம் முகத்தை உத்துப் பார்த்தா அப்படித்தான் நமக்கும் தெரியுது!
இப்படிதாங்க பல பேரு மண்டைய ஒடச்சுட்டு இருக்காங்க. இது சிலியன் மர்பியா இல்ல எமியானு. இதை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்களும் அடித்துத் தூள் கிளப்பிக் கொண்டிருக்கு.. முகமாற்றம் இல்லை, ஆளும் கூட எலும்பும் தோலுமாக மாறியிருக்கிறார் எமி ஜாக்சன்..!
சரி அவங்களை விடுங்க.. நீங்க என்ன நினைக்கறீங்க.. எமியோட இந்த டிரான்ஸ்பார்மேஷன் பத்தி.. உங்க கமெண்ட்ஸை தட்டி விடுங்க கொஞ்சம்.
Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!
Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?
மறைந்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.. வாடிகன் திருச்சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
2026 சட்டப்பேரவை தேர்தல்: டிசம்பருக்கு பின்னரே கூட்டணி குறித்து தவெக முடிவு?
Summer Jokes: மே முதல் கத்தரி வெயில்.. ம்க்கும்.. இப்ப மட்டும் வெண்டைக்காய் வெயிலா அடிக்குது...!
தொடர் சாதனை உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் மக்கள் தவிப்பு!
அர்ஜென்டினாவில் ரயில்வே தொழிலாளியின் மகனாக பிறந்து.. போப்பாண்டவராக உயர்ந்த.. பிரான்சிஸ்!
Monday Motivation... ஹாய் பிரண்ட்ஸ்.. நீங்க காலைல கண் விழிச்சதும் முதல்ல எதைத் தேடுவீங்க?
கோவையில் வரும் 26,27 தவெக கட்சியின் பூத் கமிட்டி கூட்டம்... விஜய் பங்கேற்பு!
{{comments.comment}}