வானிலை ஆய்வு மையத்தின்.. முதல் பெண் தலைவராக நாளை பொறுப்பேற்கிறார்.. அமுதா!

Feb 28, 2025,07:51 PM IST

சென்னை: வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். நாளை முதல் இதன் தலைவராக அமுதா பொறுப்பேற்கிறார். இவர் தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது .


இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சென்னை வானிலை ஆய்வு மையத்தில், தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக   பணிபுரிந்தவர் பாலச்சந்திரன். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மூலம் தமிழ்நாட்டின் நான்கு பருவ காலகட்டத்தில் நிலவும் வானிலை தரவுகளை துல்லியமாக ஆராய்ந்து , வானிலை தொடர்பான செய்திகளை அவ்வப்போது பொது மக்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.




இந்த நிலையில், தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்தர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதன் தலைவராக தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக அமுதா நாளை பொறுப்பேற்கிறார்.


வடகிழக்குப் பருவமழை தொடர்பான தரவுகளை ஆராய்வதில் முனைவர் பட்டம் பெற்ற அமுதா கடந்த 34 வருடமாக வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நா.த.க. தலைவர் சீமானிடம் ஒன்றே கால் மணி நேரமாக நடந்த போலீஸ் விசாரணை முடிவடைந்தது

news

கூட்டணியில் ஒரு விரிசலும் விழாது.. மாறாக உங்களது ஆசையில்தான் மண் விழும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ரம்ஜான் நோன்பு.. மார்ச் 2 முதல் தொடக்கம்.. தமிழ்நாடு அரசின் தலைமை காஜியார் அறிவிப்பு

news

3 வயது பெண் குழந்தை மீது குற்றம் சாட்டிப் பேசிய.. மயிலாடுதுறை கலெக்டர் அதிரடி இடமாற்றம்

news

பாலியல் கொடுமைக்குள்ளான.. 3 வயது குழந்தை மீது புகார் கூறுவதா.. கலெக்டருக்கு அண்ணாமலை கண்டனம்!

news

உயிர் மற்றும் உரிமை பிரச்சினை.. மக்களிடம் கொண்டு சேருங்கள்.. முதல்வர் மு க ஸ்டாலின் வீடியோ

news

வானிலை ஆய்வு மையத்தின்.. முதல் பெண் தலைவராக நாளை பொறுப்பேற்கிறார்.. அமுதா!

news

முதல்வர் வேட்பாளர் விஜய்.. அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. பிகே வருகைக்குப் பிறகு மாறிய தவெக மனசு!

news

சென்னையில்.. மத்திய கல்வி இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தாருக்கு எதிராக திமுக கூட்டணி போராட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்