மதுரை : லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக ஒரே நாளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் மதுரைக்கு வர உள்ளதால் மதுரையில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய இன்னும் ஒரு வார காலமே மீதம் உள்ளது. இதனால் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஏப்ரல் 12ம் தேதியான இன்று பிரசாரம் செய்ய உள்ளார். முதலில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
பிறகு மாலையில் கோவையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில், அவருடன் இணைந்து பிரச்சாரம் செய்ய உள்ளார். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் போட்டியிடுகிறது. தேர்தல் அறிவிப்பிற்கு பிறகு முதல்வர் ஸ்டாலினும், ராகுல் காந்தியும் முதல் முறையாக இணைந்து இன்று பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
அதே போல் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று ரோட்ஷோ நடத்த உள்ளார். மதுரை நேதாஜி ரோடு துவங்கி, தெற்கு ஆவணி மூல வீதி வழியாக விளக்குத்தூண் பகுதி வரை அவர் ரோடுஷோ நடத்த உள்ளார். ஏற்கனவே இரண்டு முறை அமித்ஷாவின் மதுரை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று பகல் 3 மணி முதல் மதுரையில் வணிக நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் ராகுல் காந்தியும், அமித்ஷாவும் மதுரை விமான நிலையத்திற்கு வர உள்ளதால் மதுரை விமான நிலையத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமித்ஷாவின் வருகையால் மதுரை நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!
Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!
{{comments.comment}}