சென்னை: சென்னை புத்தகக் கண்காட்சியில் அமெரிக்கன் சென்டர் பூத் வைக்கப்பட்டுள்ளது. பலரையும் ஈர்த்து வருகிறது இந்த பூத். அமெரிக்காவில் உள்ள வாய்ப்புகள் குறித்த நூல்கள் இங்கு கிடைக்கின்றன.
சென்னை நந்தனம், ஒய்எம்சிஏ மைதானத்தில் 48வது புத்தகக் கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது. இங்கு அமெரிக்கன் சென்டர் சார்பில் பூத் அமைக்கப்பட்டுள்ளது. விரிவான புத்தக மற்றும் இதர வள தொகுப்புகளை இங்கு பார்வையிடலாம். ஸ்டால் எண் F-51க்கு வருகை தரவும் என்று அமெரிக்கன் சென்டர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறுகிறது.
அமெரிக்காவின் உண்மையான மனப்பாங்கு, வாய்ப்பு மற்றும் வாக்குறுதியை வெளிப்படுத்தும் புதுமையான, அனைவரையும் உள்ளடக்கிய, மற்றும் நிலைமாற்றமளிக்கும் உரையாடல்கள், மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த இந்திய மற்றும் அமெரிக்க மாற்றம்-உருவாக்குபவர்களுக்கு சவால்களை அளிப்பதுடன், ஊக்கமும் அதிகாரமும் அளிப்பதை அமெரிக்கன் சென்டர் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதுகுறித்து சென்னையிலுள்ள அமெரிக்க நடப்பு துணைத் தூதர் க்வென்டோலின் லெவெல்லின் அமெரிக்கன் கூறுகையில், அமெரிக்கன் சென்டர் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்பது, புதுமை உருவாக்கங்களையும் படைப்பாற்றலையும் தூண்டுவதில் இலக்கியம் மற்றும் தகவல்களின் நிலைமாற்றும் சக்தியை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.
அனுமானங்களைக் கேள்விக்குட்படுத்தவும், விமர்சன ரீதியாகச் சிந்திக்கவும், புரிதலை வளர்க்கவும், உலகில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த தனித்துவமான கருதுகோள்களைப் பயன்படுத்தவும் இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மாற்றம்-உருவாக்குபவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
அமெரிக்கன் சென்டர் பூத், மாணவர்கள், நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்களுக்கு வள ஆதாரங்களையும் பிரத்யேகத் திட்டங்களையும் வழங்கி, அமெரிக்காவில் கல்வி மற்றும் பரிமாற்ற வாய்ப்புகளைக் காட்சிப்படுத்துகிறது. அமெரிக்கன் சென்டர் பூத்திற்கு வருகை தருவோர் தள்ளுபடி கட்டணத்தில் உறுப்பினர் ஆகலாம் மற்றும் eLibraryUSA ஒரியன்டேஷனையும் பெறலாம்.
சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் உள்ள அமெரிக்கன் சென்டரின் நூலகம் 15,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் விரிவான மல்டிமீடியா மின்-வள ஆதாரங்களை உள்ளிட்ட பன்முகத்தன்மையுள்ள சேகரிப்பைக் கொண்டுள்ளது. அமெரிக்கன் சென்டரின் உறுப்பினர்கள் செய்தி இதழ்கள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள், ஆய்வுக் கட்டுரைகள், மற்றும் வீடியோக்கள் போன்ற வள ஆதாரங்களை உள்ளிட்ட ஏராளமான வணிக தரவுத்தளங்களைக் கொண்ட டிஜிட்டல் நூலகமான eLibraryUSA-க்கான பிரத்யேகமான தனிப்பயனாக்கப்பட்ட அணுகலைப் பெறலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க.. புதிய மசோதா.. சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல்
திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற வெறியுடன் உள்ள பாசிச சக்திகள்.. அடையாளம் காண்போம்.. திருமாவளவன்
22 ஆண்டுகளாக நடந்த வழக்கில்.. இன்று தீர்ப்பு.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுதலை!
வாரத்திற்கு 90 மணி நேர வேலை... எல் அண்ட் டி சிஇஓ.,வுக்கு மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் சூப்பர் பதில்!
ஈரோடு கிழக்கு தொகுதி.. வேட்பு மனு தாக்கல் தொடக்கம்.. முதல் ஆளாக பத்மராஜன் மனு செய்தார்!
பெரியார் சொல்லாதவற்றை சொன்னார் என பொய் பரப்பும் தற்குறிகள்.. துரைமுருகன் ஆவேசம்!
பொங்கலுக்கு ஊருக்குப் போலாமா.. இன்று முதல் 13ம் தேதி வரை .. 21,904 சிறப்புப் பேருந்துகள்!
பெரியார் குறித்த பேச்சு.. நாம் தமிழர் சீமான் மீது குவியும் புகார்கள்.. இதுவரை 11 மாவட்டங்களில் FIR
அக்டோபர் முதல் மார்ச் வரை மட்டுமே படங்களில் நடிப்பேன்.. மற்ற நேரங்களில் ரேஸ்.. அஜீத் அறிவிப்பு
{{comments.comment}}