அமேஸான் நிறுவனர் ஜெப் பெஸாஸின் .. முன்னாள் மனைவி.. 2வது கணவரிடமிருந்து விவாகரத்து!

Jan 13, 2023,12:51 PM IST
வாஷிங்டன்:  அமேஸான் நிறுவனர் ஜெப் பெஸாஸின் முன்னாள் மனைவியான மெக்கன்சி ஸ்காட் தனுத 2வது கணவர் டேன் ஜூவட்டிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளார். சமீபத்தில் இந்த விவாகரத்து தொடர்பான இறுதி தீர்ப்பில் வாஷிங்டன் கோர்ட் நீதிபதிகள் கையெழுத்திட்டனர். இதையடுத்து இந்த விவாகரத்து இறுதியாகியுள்ளது.



சியாட்டிலைச் சேர்ந்த டேன், ஒரு பள்ளி ஆசிரியர் ஆவார்.  தங்களது சொத்துக்கள், கடன்கள் போன்றவை எப்படி பிரித்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்த ஒப்பந்தத்தில் சமீபத்தில் ஸ்காட்டும், டேனும் கையெழுத்திட்டிருந்தனர். ஸ்காட் தரப்பில் ஜீவனாம்சம் எதுவும் கோரப்படவில்லை. 

இவர்கள் இருவரும் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இந்த திருமண பந்தம் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. இருவரும் விவாகரத்து கோரி விண்ணப்பித்தனர். தற்போது அது இறுதியாகியுள்ளது.

ஸ்காட்டும், ஜெப் பெஸாஸும் 25 ஆண்டு காலம் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள் என்பது நினைவிருக்கலாம்.  2019ம் ஆண்டு இந்த திருமண பந்தம் முடிவுக்கு வந்தது.  நாவல் ஆசிரியையான ஸ்காட் அமெரிக்காவின் 3வது பெரும் பணக்காரப் பெண்மணி ஆவார்.  பெஸாஸுக்கும், ஸ்காட்டுக்கும் நான்கு குழந்தைகள் உள்ளனர். விவாகரத்து பெற்றபோது ஸ்காட்டுக்கு, 38.3 பில்லியன் டாலர் மதிப்பிலான அமேஸான் பங்குகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தனது வருவாயின் பெரும் பகுதியை தான தர்மப் பணிகளுக்கு செலவிட்டு வருகிறார் ஸ்காட்  என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்