சென்னை: திரையரங்குகளில் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வெற்றி நடைபோட்ட அமரன் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அமரன். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.கடந்த தீபாவளிக்கு வெளியான இத்திரைப்படம் சூப்பர் டூப்பர் கிட் அடித்துள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி இப்படத்திற்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைப்பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
இத்திரைப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் கடந்த 2014ம் ஆண்டு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பொதுமக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் தனது இன்னுயிரை தியாகம் செய்தார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு தமிழகத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிக வசூலை ஈட்டிய படமாக இது அமைந்துள்ளது. பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது.
உலக அளவில் சுமார் 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் ரூ.42.3 கோடி வசூலித்தது. இந்த படம் வெளியான 3 நாட்களிலேயே உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், தற்போது இதன் வசூல் 350 கோடியை நெருங்கி வருகின்றது.
இந்நிலையில் அமரன் திரைப்படம் டிசம்பர் 5 (இன்று) ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நெட்பிளிக்ஸில் இன்று இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் உரிமையை ரூ.60 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாம். தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் இப்படம் வெளியாகியுள்ளது.
தியேட்டர்களில் இன்னும் கூட வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் தற்போது வீடுகளிலும் வெற்றி நடை போட வந்து விட்டது அமரன்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி
கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!
மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!
எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!
அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!
{{comments.comment}}