சோற்றுக்கற்றாழை.. பாக்கதாங்க நாங்க முரட்டுத்தனமா இருப்போம்.. ஆனா பல நோய்களுக்கு சூப்பர் மருந்து!

Apr 16, 2024,12:32 PM IST

- பொன் லட்சுமி 


சோற்றுக்கற்றாழை.. இந்தப் பெயரைக் கேட்டதுமே அந்தக் காலத்து ஞாபகம் டக்கென ஓடி வந்து விடும்.. எப்படிப்பட்ட அருமையான மருந்து தெரியுமா இது.. பாக்குறதுக்கு  தான் முரட்டுத்தனமா இருக்கும்.. ஆனால் அத்தனை அற்புதமான மருத்துவ குணம் வாய்ந்த செடி இது.


சித்த வைத்தியம் முதல் பாட்டி வைத்தியம் வரை  மருத்துவம் என்றாலே சோற்றுக்கற்றாழை தான். அந்த அளவிற்கு அதில் என்னற்ற  மருத்துவ குணங்கள்  அடங்கி இருக்கிறது.. பலவகையான நோய்களை குணப்படுத்தும்  அருமருந்து ஆகும்.. இன்றைய நவீன காலத்திலும் இதன் பயன் அதிக அளவில் உள்ளது... இதோ அதன் பயன்களை பற்றி பார்ப்போம் வாருங்கள்.


பெண்களுக்கு அருமருந்து:-




" குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு என்பார்கள் "  பெண்களுக்கு ஏற்படக்கூடிய கருப்பை சார்ந்த எல்லா வகையான நோய்களுக்கும்  இது மிகச் சிறந்த மருந்தாகும். அன்று பாட்டி வைத்தியத்தில் பெண்கள் வயதுக்கு வந்தது முதல் மெனோபாஸ் காலகட்டம்வரை  இந்தக் கற்றாழையை அதிகமாக பயன்படுத்தி வந்தனர். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்...  ஆனால் இன்று கால மாற்றத்தின் காரணமாக உண்ணும் உணவில் இருந்து செய்யும் வேலை முதல் என அனைத்துமே இயந்திர தனமாக மாறிவிட்டது அதனால் பெண்களுக்கு பல்வேறு விதமான கருப்பை நோய்கள் ஏற்பட்டுள்ளன.


சீரற்ற  மாதவிடாய் பிரச்சனைகள், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அடி வயிற்று வலி,  கர்ப்பபை புற்றுநோய், வெள்ளைப்படுதல் போன்ற பல நோய்களுக்கு  இது அரும்பெரும் மருந்தாகும்.. இந்தக்  கற்றாழையில் முள் போன்று இருக்கும் பகுதியை  அகற்றிவிட்டு அதன் உள்ளே இருக்கும்  ஜெல்லை எடுத்து  ஐந்தாறு முறைக்கு மேல் கழுவி  அதனுடன் சிறிதளவு தேன் கலந்து மிக்ஸியில் நன்றாக அரைத்து அந்த ஜூஸை  அடிக்கடி குடித்து வரும்போது பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகும்..


அழகுக்கு அழகு சேர்க்கும்:-




மருந்துக்காக மட்டுமல்லாமல் அழகு குறிப்புகளிலும் முக்கிய இடம் பிடிப்பது இந்த  கற்றாழை ஜெல் தான்... வெயில் காலத்தில்   சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாவும் வைத்திருக்க இந்த  கற்றாழை ஜெல்  பயன்படுகிறது. வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு  சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி  தோலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி முகத்தை பொலிவடைய செய்கிறது.


எண்ணெய் பசை  முகப்பரு போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் தொடர்ந்து இந்த கற்றாழை ஜெல்லுடன் எலுமிச்சை சாறு கலந்து   பயன்படுத்தி வந்தால் பொலிவான சருமத்தை பெறலாம்.. வெயில் காலத்தில் சூரியனின் புற ஊதா கதிரில் இருந்து தப்பிக்க  வெளியில் செல்லும்போது இந்த  கற்றாழை ஜெல்லை  தடவி வரும் போது  சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது...


ஆண்களுக்கு கற்றாழையின் பயன்:-


பெண்களுக்கு மட்டும் அல்லாது ஆண்களுக்கும் இது பல்வேறு வகையான பயன்களை அளிக்கிறது.. பெரும்பாலான ஆண்களுக்கு  ஷேவ் செய்த பின் அந்த இடத்தில் சிறிது எரிச்சல் இருக்கும்.. அதற்கு கற்றாழை  ஜெல்லை  அந்த இடத்தில் தடவி வரும்போது  குளுமையாக இருக்கும் . அதே சமயம் எரிச்சலையும் கட்டுப்படுத்தும்.


வெயிலில் அலையும் ஆண்களுக்கும் குறிப்பாக விடலை பருவத்தில் இருக்கும் ஆண்களுக்கும்  கண்டிப்பாக முகப்பரு எட்டிப் பார்க்கும்  அதற்கு கற்றாழை ஜெல்லுடன்  டி ட்ரி ஆயிலும் சேர்த்து தடவி வரும்போது  மிகச் சிறந்த பலனை தரும்.. அது மட்டுமல்லாமல் ஆண்களுக்கு ஏற்படும் தாம்பத்திய குறைபாடுகளையும் இது குணப்படுத்துகிறது... இதற்கு கற்றாழையை அப்படியே வேரோடு பிடுங்கிக் கொள்ளுங்கள்...  அந்த வேரை  நன்றாக மண் போக அலசி  சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்  பின் இட்லி பாத்திரத்தில் தண்ணீருக்கு பதில் பாலை ஊற்றி  வைத்து அவிக்க வேண்டும். அதன் பின்பு அந்த வேறு எடுத்து  வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ளுங்கள்.. பின் காய்ந்ததும் அதை எடுத்து  மிக்ஸியில்  பொடியாக அரைத்து எடுத்து ஒரு கண்ணாடி  ஜாரில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.


தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பு  ஒரு டம்ளர் பாலில்   ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் தேன் அல்லது நாட்டு சர்க்கரை பனங்கற்கண்டு இவற்றில் ஏதாவது ஒன்றை  கலந்து அருந்தி வாருங்கள்..  இது  ஆண்களுக்கென்றே  இயற்கை தந்த வயாகரா  ஆகும்..


கூந்தல் பராமரிப்பில் கற்றாழை :-




இன்றைய காலத்தில் நம்மில்  பெரும்பாலான ஆண்கள் பெண்கள் என அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சனை முடி உதிர்தல்  தான்.. நாம் உண்ணும் உணவில் இருந்து பயன்படுத்தும்  அனைத்து செயற்கை பொருள்களினால்  தான் இந்தப் பிரச்சினைகள் உருவாகின்றன... நம் தலை முடியை ஆரோக்கியமாக மாற்ற  நாம் அன்றாடம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயுடன் கற்றாழை  ஜெல்லை கலந்து தலைக்கு  தடவி நன்றாக மசாஜ் செய்து  பின் ஒரு மணி நேரம் கழித்து  தலைக்கு  குளித்து வருவதன் மூலம் முடி உதிர்தல் பிரச்சனைக்கு  நல்ல பலன் கிடைக்கும்.. அது மட்டுமில்லாமல் ஆரோக்கியமாகவும்  நீளமானதாகவும்  முடி வளரும்.. கற்றாழை  குளிர்ச்சியானது அதனால் ஒரு சிலருக்கு தலைவலி ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அவர்கள் இதை பயன்படுத்துவதை தவிர்க்கவும்..


அது மட்டுமல்லாமல்  கீழே விழுந்து அடிபட்டால் அந்த வீக்கத்திற்கு கற்றாழையை விளக்கில்  சூடுபடுத்தி ஒத்தடம் கொடுக்கும்போது அந்த வலி வீக்கம் எல்லாம் வற்றிவிடும்.. ஆறாத கொப்புளங்கள் தீப்புண் போன்றவற்றின் மீது  கற்றாழை ஜெல்லை எடுத்து பூசினால்  விரைவில்  குணமாகும்.. இன்றும் கிராமப்புறங்களில் இந்த பழக்கம் வழக்கத்தில் உள்ளது.


வாஸ்து சாஸ்திரம்:- 


அழகு ஆரோக்கியம் இவற்றை தாண்டி  வாஸ்து சாஸ்திரப்படி  இந்தக் கற்றாழையை வீட்டில் வளர்க்கும் போது பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கிறது.. கிராமப்புறங்களில் இன்றும் வீட்டின் முன் இந்த கற்றாழையை கட்டி தொங்க விடுவார்கள்  இதனால் கண் திருஷ்டி  போன்ற எதிர்மறை தீய சக்திகள் எதுவும் அண்டாமல் வீட்டை காக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை..  அப்படி கட்டி தொங்கவிடப்படும் கற்றாழை  மண் இல்லாமல் கூட  காற்றின்  ஈரப்பதத்தை தக்க வைத்துக்  கொண்டு இரண்டு மூன்று ஆண்டுகள் கூட வாழும்..

இந்த கற்றாழையை வீட்டில் வளர்க்க  செலவும் ஆகாது இடமும் அதிகளவு தேவைப்படாது... ஒரு சின்ன பூந்தொட்டி இருந்தா கூட போதும்  பராமரிப்பும் அதிகமாக  தேவைப்படாது..


இந்த இயற்கை நமக்கு பல்வேறு வகையான மூலிகைகளை பரிசளித்துள்ளது... கோடை காலம் ஆரம்பித்து விட்டாலே  எப்படி நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம் என்று அனைவரும் யோசிக்கிறார்கள்... "கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதுபோல  "  இயற்கையாக கிடைக்கக்கூடிய இந்த கற்றாழையை அருகில் வைத்துக் கொண்டு ஆயிரக்கணக்கில் செலவு செய்து   கண்ட கண்ட க்ரீம் லோசன்களை உபயோகப்படுத்துகிறார்கள்.. இதனால் எவ்வளவு பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என்று தெரிந்தும் அதைத்தான் பெரும்பாலான பெண்கள்   செய்கிறார்கள்.


இன்னும் என்ன யோசிச்சுகிட்டே இருக்கீங்க  அழகுக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும்  தேவையில்லாமல் செலவு பண்ணுவதை விட்டுட்டு இயற்கையாக  கிடைக்கக்கூடிய  இந்தக் கற்றாழையை பயன்படுத்துங்க..  இப்போ வெயில் காலம் ஆரம்பிச்சாச்சு முடிஞ்ச அளவுக்கு தினமும் கற்றாழையை ஜூஸ் போட்டு குடிங்க.. உடம்பும் குளிர்ச்சி ஆயிடும், அதே நேரத்தில் உங்க அழகும் ஆரோக்கியமும்  பல மடங்கு பெருகும்.


(குறிப்பு: மூலிகை மருத்துவத்தை மேற்கொள்வதற்கு முன்பு உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்)

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்