- பொன்லட்சுமி
விவசாயிகள் தங்கள் பயிர்களை கால்நடைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக விலை நிலங்களை சுற்றி வேலி அமைப்பது வழக்கமாகும்... இயற்கையாகவே வளர்ந்த முள் புதர் செடிகள், கற்றாழைகள், பனை மரங்கள் கொடி வகைகள் போன்றவற்றின் மூலம் வேலி அமைத்திருந்தார்கள்... ஆனால் இன்று அவற்றையெல்லாம் அழித்து கம்பி வேலி அமைக்கிறார்கள்... இந்த உயிர்வேலிகள் பயிர்களை பாதுகாக்கும் வேலி மட்டுமல்லாது பலவகையான உயிர்களின் இருப்பிடமும் ஆகும்... அப்படிப்பட்ட இயற்கையான வேலிகளை கம்பிகள் இந்று ஆக்கிரமித்திருப்பதால் பல கேடுகள்தான் நிகழ்கின்றன.
கிராமப்புறங்களில் இன்றும் சில இடங்களில் கற்றாழையை தான் வேலியாக பயன்படுத்துகிறார்கள்... இந்த வேலி கற்றாழையை தாண்டி ஆடு மாடுகள் மட்டுமல்லாது வேறு எந்த விலங்குகளும் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தாது. ஏனென்றால் இந்த கற்றாழையில் இருபுறமும் குட்டி குட்டியாக முட்கள் இருக்கும். நுனியில் பெரிய முள் இருக்கும். அதனால் எந்த விலங்குகளும் உள்ளே புக முடியாது.. வேலிக்காக மட்டும் இந்த கற்றாழை பயன்படுவதில்லை. இதிலிருந்து நார்களும் கைவினைப் பொருள்களும் தயாரிக்கிறார்கள்....
சிறு வயதாக இருக்கும் போது பக்கத்து வீட்டு பாட்டி கத்தாழம் காய் இழைப்பார்கள்.. அதாவது கத்தாழை செடியில் மேல் பகுதியில் மொட்டு போல் இருக்கும். அதனை ஒடித்து கொண்டு வருவார்... அந்த மொட்டை உடைக்கும் போது கையில் முள்குத்தாத அளவுக்கு பதமாக கையாள வேண்டும்... அந்தக் காய் இழைப்பதற்காக ஒரு பெரிய கட்டையை தயார் செய்து வைத்திருப்பார். அந்தக் கட்டையில் ஒரு பெரிய ஆணி அடித்திருக்கும்.. அந்த ஆனியில் கற்றாழையின் ஒரு பகுதியை முடிச்சு போட்டு அதன் மேல் ஒரு கட்டையை வைத்து அடிப்பார். பின் இரு பக்கமும் கைப்பிடி வைத்த அரிவாள் போன்ற சிறு கத்தியை வைத்து மேல் தோலை பக்குவமாக பிரித்தெடுப்பார்.
அந்தக் கற்றாழை தோலை அகற்றும் போது ஒரு வாசனை வரும். பின்பு மறுபுறமும் அதே மாதிரி அடித்து கத்தியை வைத்து மேல் தோலை பிரித்து எடுப்பார். இப்படி எடுத்து வைத்த நார்களை எல்லாம் வெயிலில் காய வைப்பார் ... பின்பு வாரம் ஒரு முறை இதில் கிடைக்கும் நாரை வாங்குவதற்காக வியாபாரி வருவார். அப்பொழுதெல்லாம் இதற்கு விலை குறைவாக தான் கிடைக்கும். இதில் வேலைபாடு அதிகம் தான். ஆனாலும் அன்று எங்கள் ஊரில் பெரும்பாலோரின் வேலை இதுவாகத்தான் இருந்தது. அன்று வீட்டு சுவருக்கு வெள்ளை அடிப்பதற்கு இந்த நார்களை தான் அதிகமாக பயன்படுத்தினார்கள். அது மட்டுமல்லாது மாடுகளுக்கு கட்டும் மூக்கணாம் கயிறு கூட இதிலிருந்து தான் தயாரித்தார்கள்.
இதை எல்லாம் பக்கத்தில் இருந்து பார்க்கும்போது அழகாக இருந்தது.. இப்பொழுதும் எங்கள் ஊரில் பல தோட்டங்களில் வேலிகளில் இந்த கற்றாழை பயன்படத்தான் செய்கிறது.. ஆனால் இந்த கற்றாழையை தொழிலுக்காக யாரும் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால் இதில் வேலைப்பாடு அதிகம் ஊதியம் குறைவு.. இன்று தொழில்நுட்பத்தின் உதவியோடு இந்த கற்றாழை நாரில் இருந்து கூடைகள், கயிறுகள், பொம்மைகள், பாத்திரம் தேய்க்கும் ஸ்கிரப்பர் இன்னும் எண்ணற்ற கைவினைப் பொருள்கள் தயாரிக்கிறார்கள். இது ஒரு வரவேற்கத்தக்க விஷயம் ஆகும்.
இந்த கற்றாழை வேலியை அமைக்க அதிக செலவும் ஆகாது.. வேலிக்காக இந்த கற்றாழையை பயன்படுத்தும் போது ஆடு மாடுகள் மற்றும் பிற வன உயிரினங்களிடமிருந்தும் பயிர்களை காப்பாற்றுவது மட்டுமல்லாமல், பல உயிரினங்களுக்கு இருப்பிடமாகவும் இந்த வேலிகள் பயன்படுகிறது.. இந்த வேலிகளின் மீது பல்வேறு வகையான மூலிகைகள் வளர்கிறது . ஆடு மாடுகளுக்கு தேவையான இலை தழைகள் கிடைக்கிறது. இதற்கு உயிர்வேலி என்று கூட ஒரு பெயர் உண்டு. ஆம் இந்த கற்றாழை வேலியில் பல வகையான உயிர்கள் வாழ்கின்றன..
பல்லுயிர் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் இந்த உயிர்வேலி தான் முக்கிய பங்காற்றுகிறது. இதில் எண்ணற்ற வகையான பூச்சி இனங்கள் வாழ்கின்றன.. அதனை கட்டுப்படுத்த பாம்பு தவளை ஓனான் போன்ற உயிரினங்களும் வாழ்கின்றன.. அது மட்டுமல்லாமல் பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை மயில்கள் கட்டுப்படுத்துகிறது.. மயில்களின் எண்ணிக்கையை குள்ளநரி கட்டுப்படுத்துகிறது.. இப்படியாக இப்பல்லுயிர்களின் பெருக்கத்தை இந்த உயிர்வேலிகள் கட்டுப்படுத்துகின்றன.
ஆனால் இன்று விவசாயிகளின் பலவிதமான பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம். இந்த உயிர் வேலியை அகற்றியதுதான்.. விளைநிலங்கள் அனைத்தும் பிளாட்டுகளாக மாறிய நிலையில் இந்த வேலிகளை அகற்றிவிட்டு அனைவரும் முள்வேலி களை அமைக்கிறார்கள். இதில் ஒரு சிலர் மின்சார வேலியும் அமைக்கிறார்கள்.. இதனால் சில நேரங்களில் விலங்குகள் இறப்பதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது.. இதன்மூலம் பல உயிரினங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.. இயற்கையாக கிடைக்கக்கூடிய மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள் கூட இதனால் நமக்கு கிடைக்க முடியாத அளவிற்கு போய்விட்டது.
பல பிரச்சினைகளை சந்தித்த பிறகு இன்று விவசாயிகள் பலர் இயற்கையாக கிடைக்கக்கூடிய இந்த கற்றாழையை வேலியாக பயன்படுத்த தொடங்கி விட்டார்கள் இது மிகவும் வரவேற்கத்தக்க விஷயம் ஆகும்.
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க அரிய வாய்ப்பு
2028 அதிபர் தேர்தலுக்குத் தயாராகப் போகிறாரா கமலா ஹாரிஸ்.. அடுத்த திட்டம் என்ன?
நவ. 14, 15 கன மழை எச்சரிக்கை.. சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.. மேயர்பிரியா அப்டேட்!
ப வரிசைப் பட நாயகன்.. தமிழ்த் திரையுலகின் முத்திரை இயக்குநர்.. பீம்சிங் நூற்றாண்டு விழா.. நாளை!
உங்களுக்காக நடனமாடுகிறோம்.. எங்களுக்காக இதைச் செய்யுங்களேன்.. மேடை நடனக் கலைஞர்கள் கோரிக்கை!
மீண்டும் இ பாஸ் கட்டாயம்.. கொடைக்கானல், ஊட்டியில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்
TNPSC குரூப் 2 தேர்வு எழுதியவர்களா நீங்கள்.. சூப்பரான குட் நியூஸ் சொன்ன தேர்வாணையம்..!
Weather Report: தமிழ்நாட்டில்.. 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு .. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
விஜய் ஆர்கானிக் மாஸ் என்றால்... விசிக என்ன இன்ஆர்கானிக் மாஸா?.. விசிக தலைவர் திருமாவளவன்
{{comments.comment}}