சென்னை மெட்ரோ.. நவம்பரில் சரிந்த பயணிகளின் எண்ணிக்கை.. 83.61 லட்சம் பயணிகள் பயணம்!

Dec 02, 2024,04:19 PM IST

சென்னை: அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் சென்னை மெட்ரோவில் நவம்பர் மாதம் பயணித்த பயணிகளின் எண்ணிக்கையில் லேசான சரிவு காணப்பட்டுள்ளது.


2024 நவம்பர் மாதத்தில் 83.61 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று சிஎம்ஆர்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:




சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பகத்தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 83,61,492 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர்.


நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,15,008 பயணிகளும், மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகளும், மே மாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகளும்,  ஜூலை மாதத்தில் 95,35,019 பயணிகளும்,  ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பயணிகளும், செப்டம்பர் மாதத்தில் 92,77,697 பயணிகளும் மற்றும் அக்டோபர் மாதத்தில் 90,83,996 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம்செய்துள்ளனர். அதிகபட்சமாக 06.11.2024 அன்று 3,35,189 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.


2024, நவம்பர் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 27,50,030 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 599 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 6,208 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 35,62,463 பயணிகள் (Online QR 1,57,016; Paper QR 18,40,921; Static QR 2,24,276; Whatsapp - 5,40,257; Paytm 3,90,030; PhonePe – 2,99,396; ONDC – 1,10,567),சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 20,42,192 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.


சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்றுகொள்ளலாம்.


மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஜூலை மாதத்திலிருந்து மெட்ரோ ரயில்களில் 90 லட்சத்திற்கும் மேலான பயணிகள் பயணித்து வந்த நிலையில் தற்போது நவம்பரில் இதில் லேசான சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பொங்கல் பண்டிகை 2025 : தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்.. நோட் பண்ணிக்குங்க!

news

மகிழ்ச்சி பொங்கட்டும்.. நல்லிணக்கம் வளரட்டும்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

news

பொங்கல் வைக்கும் நேரத்தில் நாளை மழை பெய்யுமா.. என்ன சொல்கிறது வானிலை மையம்?

news

மாடு பிடிமாடு.. அதிகமாக பிடிச்சது யாரு.. இந்தா பிடி காரு.. களைகட்டப் போகும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

news

ரவி மோகன் என்றே இனி என்னை அழையுங்கள்.. தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார் நடிகர் (ஜெயம்) ரவி!

news

பொங்கல் 2025 .. பொங்கல் கிழக்கு திசையில் பொங்கி வழிந்தால்.. என்ன பலன் கிடைக்கும் ?

news

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... டோக்கன் பதிவிறக்கம் தொடங்கியது.. காளைகள் ரெடி.. ஆரம்பிக்கலாங்களா!

news

ஏழுமலையானே இது என்ன சோதனை.. திருப்பதி லட்டு கவுண்ட்டரில் தீ விபத்து.. அடுத்தடுத்து துயரம்!

news

நாங்கள் போட்டியிடும் அளவுக்குக் கூட.. தகுதியில்லாத கட்சி திமுக.. டாக்டர் தமிழிசை தடாலடி பேச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்