தமிழ்நாட்டில் ஆல் பாஸ் நடைமுறையே தொடரும்.. மாற்றமில்லை.. அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை: தமிழகத்தில் ஆல் பாஸ் நடைமுறையே தொடரும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுப் பள்ளிகளில், 5 வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதனால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அல்லாத பள்ளிகளில் தற்போது உள்ள அதே நடைமுறையே தொடரும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டிதில் அனைத்து பள்ளிக்குழந்தைகளும் தொடர்ந்து தடை இன்று கல்வி பயின்றிட ஏதுவாக எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி வழங்கப்படும் முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளை திருத்தம் செய்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு இரண்டு மாதங்களில் மறு தேர்வு முறையையும், அதிலும் தேர்ச்சி பெறாத குழந்தைகள் அதே வகுப்பில் ஓராண்டு பயில வேண்டும் என்ற முறையையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி நடத்தப்படும் மத்திய அரசு பள்ளிகளுக்கு இந்த புதிய நடைமுறை பொருந்தும் எனறும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள், தடை இன்றி எட்டாம் வகுப்பு வரை கல்வி பெறுவதில் ஒரு பெரிய தடைக்கல்லை மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது உண்மையிலேயே வருந்தத்தக்கது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தேசிய கல்விக் கொள்கைகள் பின்பற்றாமல் நமது மாநிலத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு, சிறந்த கல்வியாளர்களை ஒருங்கிணைத்து ஒரு புதிய மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக நமது அரசு தொடங்கிய பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளன.
தமிழ்நாட்டில் மாநில கல்விக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் சூழ்நிலையில், மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மத்திய அரசு பள்ளிகளைத் தவிர பிற பள்ளிகளுக்கு பொருந்தாது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும் மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்ட விதிகள் குறித்து எந்த வகையிலும் குழப்பம் அடையத் தேவையில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும் என்பதை அழுத்த திருத்தமாக சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.
நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டதைப் போல, ஒரு தலைமுறையில் பெறக்கூடிய கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைகளுக்கும் பாதுகாப்பாக அமையும், கல்விதான் ஒரு சமூகத்தின் எதிர்காலத்தில் அடித்தளம். எனவே, மாணவர்கள் மகிழ்ச்சியோடும், பாதுகாப்போடும் கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவது தான் திராவிட மாடல் அரசின் இலக்கு.
இந்த இலக்கை எய்து, இந்தியத் துணைக் கண்டத்திற்கே, தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக தொடர்ந்து விளங்கும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து தொய்வின்றி, நமது அரசு முன்னெடுத்துச் செல்லும் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}