இனி ஓன் யூஸ் காரையும்.. டாக்சி போல பயன்படுத்தலாம்.. போக்குவரத்து துறை  அதிரடி

Nov 18, 2023,05:47 PM IST

சென்னை: தமிழ்நாட்டில்  இனி எந்த வகையான கார்களையும் வாடகைக் கார்களாக பயன்படுத்த முடியும். அதற்கான அனுமதியையும், உரிய கட்டணத்தையும் போக்குவரத்துத் துறைக்கு செலுத்தினால் போதுமானது என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் இனி அனைத்து வகையான கார்களையும் பொது போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்து பயன்படுத்தலாம். தமிழகத்தில் குறிப்பிட்ட வகை கார்களை மட்டும் தான் வாடகை கார்களாக பயன்படுத்த முடியும் என்று இருந்த விதி தற்போது மாறியுள்ளது. 


இது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம்  அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சுற்றுலா மேம்பாட்டு நோக்கில் சொகுசு கார்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கார்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக (மஞ்சள் போர்டு) பதிவு செய்து இயக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 




பிற மாநிலங்களில் இந்த நடைமுறை ஏற்கனவே உள்ளது. தற்போது தமிழ்நாட்டுக்கும் இது அறிமுகமாகியுள்ளது. அதன்படி, இனிமேல் சொந்த வாகனங்களை சுற்றுலா நோக்கில் பயன்படுத்த விரும்பினால் அதற்குரிய கட்டணத்தைக் கட்டி லைசென்ஸ் வாங்கிக் கொண்டு பயன்படுத்தலாம்.


இந்த உத்தரவு காரணமாக டாக்சிகள், கேப்களுக்கான பற்றாக்குறை முடிவுக்கு வரும். ஒன்றுக்கு மேற்பட்ட கார்கள் வைத்திருப்போர், அதில் ஒன்றை டாக்சி போல மாற்றி பயன்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மாநில உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து ஆராய ஜோசப் குரியன் தலைமையில் குழு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அதிமுக பொதுக்குழு கூட்டம் மே 2ல் நடைபெறும்:எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!

news

நெல்லையில்.. சக மாணவரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது? டாக்டர். அன்புமணி

news

தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில்..பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு..!

news

ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்!

news

இந்தியில் வெளியாகியுள்ள 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

கோடை விடுமுறையை முன்னிட்டு.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க எஸ்இடிசி முடிவு..!

news

சித்திரை திருவிழாவுக்கு வாருங்கள்.. அன்போடு அழைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்!

news

பாமகவில் உட்கட்சி பூசல்கள் சரியாகி விட்டது.. கௌரவத் தலைவர் ஜி கே மணி தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்