சென்னை: லோக்சபா தேர்தல் முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் போட்டியிட இதுவரை 1403 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
மத்திய சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம் ஆகியோரது மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளர் ராசா, அதிமுக வேட்பாளர் லோகேஷ், பாஜக வேட்பாளர் எல். முருகன் உள்ளிட்டோரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. கள்ளக்குறிச்சியில் திமுக அதிமுக மற்றும் பாமக வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோ வின் மனு ஏற்கப்பட்டது. மதுரையில் அதிமுக சார்பில் டாக்டர் சரவணன், மார்க்சிஸ்ட் சார்பில் சு. வெங்கடேசன்,பாஜக சார்பில் ராம சீனிவாசன் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
நாமக்கலில் கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன், அதிமுகவின் தமிழ்மணி, பாஜக வேட்பாளர் ராமலிங்கம் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
தென் சென்னை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், திமுக தமிழச்சி தங்கபாண்டியன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. அதேபோல பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் வேட்பு மனும் ஏற்கப்பட்டது.
கடலூர் தொகுதியில் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் சிவக்கொழுந்து, திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத். காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியில் திமுக சார்பில் போட்டியிடும் செல்வம், அதிமுக வேட்பாளர் ராஜசேகர், பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் ஆகியோரது வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டன.
அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஓ பன்னீர்செல்வம், திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோரது மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. தென்காசி தனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் தமிழக முன்னேற்றக் கழகம் தலைவர் ஜான் பாண்டியன் மனு ஏற்கப்பட்டது.
கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் அண்ணாமலை வேட்பு மனுவும் ஏற்கப்பட்டுள்ளது. மற்ற முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. இதுவரை முக்கியக் கட்சி வேட்பாளர்கள் யாரும் நிராகரிக்கப்படவில்லை.
கன்னியாகுமரியில் 22 வேட்பு மனுக்கள் ஏற்பு
கன்னியாகுமரியில் 33 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 22 வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரத், பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், நாதக வேட்பாளர் மரிய ஜெனிஃபர் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட், அதிமுக வேட்பாளர் ராணி, பாஜக வேட்பாளர் நந்தினி, நாதக வேட்பாளர் ஜெமினி.
வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வீராசாமி கலாநிதி, அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ மனுக்கள் ஏற்கப்பட்டன.
நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ. ராசா, அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன். நெல்லையில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் மனுக்கள் ஏற்கப்பட்டன.
திருமாவளவன் மனு ஏற்பு
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் திருமாவளவன் , அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி,நாதக வேட்பாளர் ஜான்சிராணி மனுக்கள் ஏற்கப்பட்டன.
லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்க்கப்பட்டது. விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாதக வேட்பாளரின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது.
நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான எல். முருகன். மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதா, பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலின். திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மனுக்கள் ஏற்கப்பட்டன.
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம், அதிமுக வேட்பாளர் தமிழ் வேந்தன், நாதக வேட்பாளர் மேனகா மனுக்கள் ஏற்பு.
தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முரசொலி, தேமுதிக வேட்பாளர் சிவனேசன் நாதக வேட்பாளர் ஹிமாயூன் கபீர் மனுக்களும் ஏற்கப்பட்டன.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}