டெல்லி: சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் விராட் கோலியின் சாதனைகள் இந்தியாவுக்கு நிறைய நல்லது செய்துள்ளது. நாளை இந்தியா தனது முதல் போட்டியில் வங்கதேசத்தைச் சந்திக்கவுள்ள நிலையில் விராட் கோலியின் சாம்பியன்ஸ் டிராபி அதிரடிகளைப் பற்றிப் பார்க்கலாம்.
2009ம் ஆண்டு தான் முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடினார் விராட் கோலி. அதில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 104 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் குவித்து அசத்தினார். அதில் அவருக்கு மேன் ஆப் தி மேட்ச் விருதும் கிடைத்தது. அதுதான் அவரது முதல் மேன் ஆப் தி மேட்ச் விருது.
2013 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அரை இறுதியில் இலங்கைக்கு எதிராக விளையாடிய கோலி 64 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற கோலியும் முக்கியக் காரணமாக இருந்தார்.
2013 இறுதிப் போட்டியில் 34 பந்துகளில் 43 ரன்களைக் குவித்து இந்தியாவுக்கு கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தார். விராட் கோலி. இப்போட்டியில் இங்கிலாந்து தோல்வியைத் தழுவியது.
2017 தொடரின் முதல் போட்டியில் 68 பந்துகளில் 81 ரன்களைக் குவித்து பாகிஸ்தானை தோற்கடிக்கக் காரணமாக இருந்தார். இப்போட்டியிலும் விராட் கோலி ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது முக்கியமானது.
2017 தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 101 பந்துகளில் 76 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து இந்தியா, அரை இறுதிக்கு முன்னேற காரணமாக இருந்தார் விராட் கோலி.
அரை இறுதிப் போட்டியில் 96 பந்துகளைச் சந்தித்த கோலி 96 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து வங்கதேசத்தை பந்தாடி இறுதிப் போட்டிக்கு இந்தியாவை இட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
2025 தொடரிலும் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். இத்தொடரில் இந்தியா வென்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துள்ளனர்.
ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு.. இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மதுரை சித்திரை திருவிழா... அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு!
மன ரீதியிலான பிரச்சனை... விரைவில் மீண்டு வருவேன்... நடிகை நஸ்ரியா!
இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு: நயினார் நகேந்திரன்!
இன்ஸ்டா ரீல்ஸால் மகள் கண் முன்னே பறிபோன தாயின் உயிர்..வைரலாகும் வீடியோ..!
அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை... பாஜக தேசிய தலைமை விளக்கம்!
வெயிலுக்கு இதமான குல்பி.. தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தின் மேல் கோயில் கோபுரம்...எதிர்க்கட்சிகள் கண்டனம்!
{{comments.comment}}