சென்னை: விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி 23ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
லைகா நிறுவன தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தில் ஆரவ் அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.ஒளிப்பதிவை ஓம் பிரகாஷ்சும்,படத்தொகுப்பினை என்.பி.ஸ்ரீகாந்த்தும் மேற்கொண்டுள்ளனர்.
இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விடாமுயற்சி திரைப்படம் பிரேக் டவுன் என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்றும், அதற்கான முறையான அனுமதியினை விடாமுயற்சி குழு பெறவில்லை என்றும், இதனால், பெரிய தொகையை பிரேக் டவுன் பட தயாரிப்பு நிறுவனம் கேட்டு விடாமுயற்சி படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியது என்றும் கூறப்படுகிறது. தற்போது பிரேக் டவுன் பட தயாரிப்பு குழுவுடன் பேச்சு வார்த்தை சுமூகமாக நடந்துள்ளதாகவும், இதனையடுத்து விரைவில் படம் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், விடாமுயற்சி படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி வருகிற 23ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகும் என்றும் தெரிகிறது.இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் வெளியாகி படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அஜித் ரசிகர்களின் மத்தியில் இந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல குட் பேட் அக்லி படம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகக் கூடுமாம். இந்த அப்டேட்டை யார் தந்திருக்கா தெரியுமா.. சாட்சாத் அஜீத்தான் தெரிவித்துள்ளார். துபாய் ரேஸில் பங்கேற்கபதற்காக சென்றுள்ள அவர் அங்கு அளித்த ஒரு பேட்டியில் இதைக் கூறியுள்ளார். மேலும் ரசிகர்களின் ஆதரவை தான் வெகுவாக மதிப்பதாகவும் கூறியுள்ளார் அஜீத்.
இது போதுமே அஜீத் என்று அவரது ரசிகர்கள் இப்போது உற்சாகமாக இதை வைரலாக்கி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!
அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!
கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!
குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!
{{comments.comment}}