நாங்க விவாகரத்து பண்ணுறோமா?.. யாரு சொன்னது.. மீடியாக்களின் வாயை அடைத்த ஐஸ்வர்யா ராய்

Dec 18, 2023,09:51 AM IST

மும்பை : நடிகை ஐஸ்வர்யா ராய், தனது கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான வதந்திகளுக்கு தனது செயலாலேயே பதிலளித்து, மீடியாக்களின் வாயை அடைத்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.


உலக அழகி பட்டம் வாங்கிய பிறகு சினிமாவிற்கு வந்த சிறிது காலத்திலேயே ஐஸ்வர்யா ராய்  காதல், ஐஸ்வர்யா ராய் திருமணம் என பல வதந்திகள் வெளி வந்து கொண்டிருந்தன. ஐஸ்வர்யா பற்றி வதந்திகள் வருவது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. பல வதந்திகளுக்கு மத்தியில் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை 2007 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ராய். இது தனிப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகவே நடத்தப்பட்டது. அதற்கு பிறகு இவர்களுக்கு 2011 ம் ஆண்டு ஆரத்யா என்ற மகள் பிறந்தாள். அதற்கு பிறகு ஐஸ்வர்யா ராய் பற்றிய வதந்திகள் குறைந்தாலும், அவரை பற்றிய ஏதாவது ஒரு செய்தி வெளி வந்த வண்ணம் இருந்தது.


ஐஸ்வர்யா ராய் கடைசியாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்த போதும் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கர்ப்பமாக உள்ளதாக மீண்டும் வதந்தி கிளம்பியது. அதற்கு பிறகு சிறித நாட்களில் அது ஓய்ந்தது. இந்நிலையில் கடந்த நாட்களாக ஐஸ்வர்யா ராய், தனது கணவர் அபிஷேக் பச்சனை பிரிய போவதாகவும், அவர்கள் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக மீடியாக்களில் வதந்தி பரவியது. இதனால் பாலிவுட்டே ஆடிப்போனது. 




ஒட்டு மொத்த பாலிவுட்டையே அதிர வைத்த இந்த தகவல் குறித்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குடும்பத்தின் தரப்பில் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. அதனால் இது உண்மை தான் என்று கூட சிலர் கூறி வந்தனர். இந்நிலையில், நேற்று தனது மகள் படிக்கும் திரிபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஐஸ்வர்யா ராயும், அவரது கணவர் அபிஷேக் பச்சனும் ஒன்றாக ஒரே காரில் வந்து இறங்கினர். இந்த விழாவில் அவர்கள் மட்டுமல்ல அமிதாப் பச்சன், ஜெயா பச்சன் என ஒட்டுமொத்த குடும்பமே சந்தோஷமாக கலந்து கொண்டு மகள் ஆரத்யா பங்கேற்ற மேடை நிகழ்ச்சியை ரசித்தனர்.


விவாகரத்து என பரவிய வதந்திக்கு ஒரே காரில் தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் வந்து முற்றுப்புள்ளி வைத்து விட்டார் ஐஸ்வர்யா ராய். இந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதை பார்த்த ஐஸ்வர்யாவின் தீவிர ரசிகர்கள் பலர், நன்றி கடவுளே வதந்திகள் எதுவும் நிஜமாகவில்லை என சந்தோஷமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு.. இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

மதுரை சித்திரை திருவிழா... அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்