நீங்க ஏர்டெல்லா யூஸ் பண்றீங்க.. ஜூலை 3 முதல் புதுக் கட்டணம் வந்துருச்சு.. இதைப் படிங்க முதல்ல!

Jun 28, 2024,05:36 PM IST

சென்னை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தனது மொபைல் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஜூலை 3ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறதாம்.


ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தியதைத் தொடர்ந்து ஏர்டெல்லும் தனது மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை 10 முதல் 21 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மக்களவை தேர்தல் முடிந்த பிறகு  இந்திய டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் என ஏற்கனவே தகவல் பரவி வந்தது. 


அதன்படி முதல் ஆளாக நேற்று ஜியோ நிறுவனம் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்த நிலையில், இன்று ஏர்டெல் நிறுவனமும் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.


ஏர்டெல் ரீசார்ஜ் கட்டண விபரம்:




அதன்படி ஏர்டெல்லின் அடிப்படை ரீசார்ஜ் பேக் ஆன 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் 28 நாட்கள் வேலிடிட்டி பேக் கட்டணம் ரூ.179 இல் இருந்து ரூ.199 என உயர்த்தப்பட்டுள்ளது.


தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளில் 28 நாட்கள் வேலிடிட்டி பேக்குகளுக்கான கட்டணம் ரூ.265லிருந்து ரூ.299 என உயர்த்தப்பட்டுள்ளது. இது ப்ரீபெய்ட் பயனாளர்களுக்கான ரீசார்ஜ் கட்டண உயர்வாகும். இது மட்டும் இன்றி போஸ்ட் பெய்ட் பிளான் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.


ஜியோ ரீசார்ஜ் கட்டண விபரம்:


47 கோடி மொபைல் வாடிக்கையாளர்களை கொண்டு முதல் இடத்தில் இயங்கி வரும் ஜியோ நிறுவனம், அதன் ரீசார்ஜ் கட்டணத்தை 12 முதல் 27 சதவீதமாக உயர்த்தி உள்ளது. இந்த கட்டண உயர்வை இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம்.


அதன்படி, தினசரி 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் 28 நாட்களுக்கான வேலிடிட்டி பேக் கொண்ட கட்டணம் ரூ.209லிருந்து ரூ.249 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், தினசரி 2 ஜிபி டேட்டா கொண்ட பேக் ரூ.349 மற்றும் அதற்கும் மேலான தொகை கொண்ட பேக்குகளை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தான்  அன்லிமிடெட் 5ஜி நெட்வொர்க் சேவை வழங்கப்பட உள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது.


மொபைல் போன் சேவைகளுக்கான 10வது அலைக்கற்றை ஏலம் அண்மையில் நிறைவடைந்த நிலையில் ரீசார்ஜ் கட்டணத்தை ஜியோ மற்றும் ஏர்டெல் உயர்த்தி உள்ளன. வரும் நாட்களில் வோடபோன் ஐடியா நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!

news

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

news

குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்