ஏர்போர்ட்னா.. இந்த பத்துதான் "டாப்"பாம்.. சென்னை எங்கப்பா இருக்கு இதுல?

Jan 07, 2023,02:37 PM IST

சென்னை: உலகளவில் ஆயிரக்கணக்கான விமான நிலையங்கள் நொடிப் பொழுதும் கண் இமைக்காமல் தேனீக்கள் போல் இயங்கி வருகிறது. வெவ்வேறு நாடுகளில் உள்ள பலவிதமான விமான நிலையங்களில் இருந்து ஏராளமான விமானங்கள் வானத்தை மொய்த்துக் கொண்டிருக்கின்றன. 


ரயில்கள் மட்டும் தாமதமாக வருவதில்லை. மாறாக விமானங்களும் கூட பல நேரங்களில் தாமதமாக வரும், கிளம்பும்.  இதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. பல விமான நிலையங்களில் விமானங்கள் தாமதமாக வருவது வழக்கமாக இருந்தாலும் சில விமான நிலையங்களில் விமானத்தை கனகச்சிதமான நேரத்தில் இயக்கி வருகின்றனர். 


அப்படி 2022ம் ஆண்டில் முழுமையான, ஸ்டிக்ட்டாக நேரத்தைக் கடைப்பிடித்த விமான நிலையங்களை வரிசைப்படுத்தியுள்ளனர். அவற்றை இங்கு பார்ப்போம்.


1.  ஹனேடா விமான நிலையம், ஜப்பான்:


ஜப்பான் நாட்டின் டோக்கியாவில் ஹனேடா விமான நிலையம் பங்க்சுவாலிட்டியில் நம்பர் 1 ஆக உள்ளது. எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிவரும் விமான நிலையங்களில் ஹனேடா விமான நிலையமும் ஒன்று. உரிய நேரத்தில் விமான பயணிகளை ஏற்றிச் செல்வதில் ஹனேடா விமான நிலையம் முதல் இடத்தில் உள்ளது. 90.3% ரேட்டிங் பெற்று முதல் இடத்தில் உள்ளது ஹனேடா விமான நிலையம்.


2. கெம்பே கவுடா விமான நிலையம், பெங்களூர்:


இரண்டாம் இடத்தில் பெங்களூர் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்தியாவின் தொழில்நுட்ப நகரமாக திகழும் பெங்களூரு விமான நிலையத்தில் நிமிடத்திற்கு ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன. இந்த பட்டியலில் 84% ரேட்டிங் பெற்று 2வது இடத்தில் உள்ளது.


3. சால்ட்லேக் சிட்டி விமான நிலையம், அமெரிக்கா:


மூன்றாம் இடத்தில் அமெரிக்காவில் உள்ள சால்ட் லேக் சிட்டி விமான நிலையம் உள்ளது. உரிய நேரத்தில் வந்து விமான பயணிகளை குஷிப்படுத்துவதன் மூலம் இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த விமான நிலையம் 83.8% ரேட்டிங் பெற்றுள்ளது.


4. டெட்ராய்ட் விமான நிலையம், அமரிக்கா:


அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் விமான நிலையம் இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. இந்த விமான நிலையம் உரிய நேரத்தில் செய்லபடுவதால் இதற்கு 82.6% ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.


5. பிலெடல்பியா விமான நிலையம், அமெரிக்கா:


ஐந்தாம் இடத்தில் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிலடெல்பியா விமான நிலையம் உள்ளது. அமெரிக்காவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் விமான நிலையங்களில் இதுவும் ஒன்று. 82.5% ரேட்டிங் பெற்று இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.


6. மின்னபோலிஸ் விமான நிலையம், அமெரிக்கா:


ஆறாம் இடத்தில் அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் உள்ள மின்னபோலிஸ் விமான நிலையம் உள்ளது. மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் இந்த விமான நிலையம் இந்த பட்டியலில் 81.9% ரேட்டிங் பெற்று ஆறாம் இடத்தில் உள்ளது.


7.  டெல்லி சர்வதேச விமான நிலையம், இந்தியா:


ஏழாம் இடத்தில் இந்தியாவின் தலைநகரான டெல்லி விமான நிலையம் உள்ளது. இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் இதுவும் ஒன்று. பெங்களூரு விமனநிலையத்தை தொடர்ந்து  டெல்லி விமான நிலையம் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இதற்கு 81.8% ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.


8. சியாட்டில் விமான நிலையம், அமெரிக்கா:


எட்டாம் இடத்தில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள சியாட்டில்-டகோமா விமான நிலையம் உள்ளது.


9. பொகோடா விமான  நிலையம், கொலம்பியா:


ஒன்பதாம் இடத்தில் கொலம்பியா நாட்டில் உள்ள பொகோடா விமான நிலையம் இடம் பிடித்துள்ளது. 


10. சார்லட் விமான நிலையம், அமெரிக்கா:


இறுதியாக பத்தாம் இடத்தில் அமெரிக்காவில் உள்ள சார்லோட் டக்ளஸ் விமான நிலையமும் இடம் பிடித்துள்ளது. இதில் ஆசிய நாடுகள் வரிசையில் பார்த்தால் இந்தியாவிலிருந்து இரண்டு விமான நிலையங்களும், ஜப்பானிலிருந்து ஒன்றும் என மொத்தம் 3 விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. மற்ற 7 இடத்திலும் அமெரிக்க கண்டத்தைச் (ஒன்று தென் அமெரிக்கா, 6 வட அமெரிக்கா) சேர்ந்த விமான நிலையங்களே உள்ளது குறிப்பிடத்தக்கது.


ஆமா, இதில்  சென்னை விமான நிலையம் எங்கே என்று நீங்கள் ஏங்குவது தெரிகிறது.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.. 2023ம் ஆண்டு பக்காவாக விமானங்களை இயக்கி இந்தப் பட்டியலுக்குள் சென்னை நுழையும் என்ற நம்பிக்கையுடன் இந்த ஆண்டைத் தொடர்வோம்.

சமீபத்திய செய்திகள்

news

வடக்கு அந்தமான் அருகே.. புதிய காற்றழுத்தம்.. நாளை உருவாகும் என்று வானிலை மையம் தகவல்

news

சக்ஸஸ்.. மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது வழித்தடத்தில்.. சுரங்கம் தோண்டும் பணி முடிந்தது!

news

வளைகாப்பு நடத்துவது எப்படி? வேலூர் காங்கேயநல்லூர் அரசுப் பள்ளி மாணவிகளின் ரீல்ஸ்..டீச்சர் சஸ்பெண்ட்!

news

Su Venkatesan Vs Vanathi Srinivasan.. உங்களுக்கு ஒவ்வாமையா.. முதல்ல பன் பட்டருக்கு வழி சொல்லுங்க!

news

ஐபோன் 16 விற்பனை தொடக்கம்.. நீண்ட க்யூவில் நின்று போட்டி போட்டு வாங்கிச் சென்ற ஐ போன் பிரியர்கள்!

news

திருப்பதி லட்டில் கொழுப்பா... குடும்பத்தோடு சத்தியம் செய்ய நாயுடு ரெடியா? .. ஜெகன் கட்சி சவால்!

news

உளவியல் சிகிச்சைக்கு மருந்து மாத்திரைகளுடன்.. உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்.. வைரமுத்து

news

என்னிடம் அரசியல் கேள்வி கேட்காதீங்கன்னு சொன்னேன்ல.. செய்தியார்களிடம் சீறிய ரஜினிகாந்த்!

news

மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.55,000த்தை கடந்தது!

அதிகம் பார்க்கும் செய்திகள்