12 படிக்கட்டுக்களில் தவழ்ந்து இறங்கிய பயணி.. வீல் சேர் தராத ஏர் கனடா.. ரூ. 81 லட்சம் அபராதம்!

Dec 27, 2023,09:45 PM IST

டோரன்டோ:  விமானத்தில் பயணிக்க வந்த மாற்றுத்திறனாளி பயணியை வீல்சேர் கொடுத்து உதவாமல், அவரை படிக்கட்டு வழியாக சிரமப்பட்டு இறங்குமாறு பணித்து அடாவடியாக நடந்து கொண்டுள்ளது ஏர் கனடா விமான நிறுவனம். இதையடுத்து அந்த நிறுவனத்திற்கு ரூ. 81 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.


அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளியை கீழே இறக்க வீல் சேரைக் கொடுக்காமல், அப்படியே இறங்கிப் போங்கள் என்று மனிதாபிமானமே இல்லாமல் கூறியுள்ளனர் விமான ஊழியர்கள்.


அந்த பயணியின் பெயர் ரோட்னி ஹாட்கின்ஸ். இவர் ஸ்பாஸ்டிக் செரிபரல் பால்சி பிரச்சினை உள்ள மாற்றுத்திறனாளி ஆவார். அவரால் கால்களை சரியாக அசைக்க முடியாது. வீல்சேரில்தான் போக முடியும், வர முடியும். ஆனால் விமானத்திலிருந்து கீழே இறங்க அவருக்கு வீல்சேர் கொடுக்கப்படவில்லை.




நீங்களே எப்படியாவது இறங்கிப் போங்கள் என்று கூறியுள்ளனர். அவர் என்னால் எப்படி போக முடியும் என்று கூறியபோது, வேறு வழியில்லை என்று கூறியுள்ளனர். சம்பந்தப்பட்ட விமானத்தில் ரோட்னியுடன், அவரது மனைவி டியன்னா ஹாட்கின்ஸும் வந்திருந்தார். இருவரும் தங்களது திருமண நாளை கொண்டாட லாஸ் வேகாஸ் வந்திருந்தனர்.


ரோட்னி, பிரிட்டிஷ் கொலம்பியாவில் வசித்து வருகிறார். அங்கு ஹார்ட்வேர் சேல்ஸ்மேனாக இருக்கிறார். 49 வயதாகும் அவர் வீல்சேர் கொடுக்கப்படாத காரணத்தால் தனது உடலை நகரும் படிக்கட்டுக்களில் சிரமப்பட்டு உரசியபடி இறங்கி வந்துள்ளார். மொத்தம் 12 படிக்கட்டுக்களை அவர் இப்படியே கடந்து வந்துள்ளார். அவரது மனைவி, ரோட்னியின் கால்களைப் பிடித்துக் கொள்ள மிகவும் சிரமப்பட்டு இறங்கி வந்துள்ளார் ரோட்னி.


இதுகுறித்து ரோட்னி கூறுகையில், நான் வீல் சேர் கேட்டபோது எனக்கு அது இல்லை என்று பதில் வந்தது. மீண்டும் கோரிக்கை விடுத்தபோதும் அது கேட்கப்படவில்லை. இதையடுத்து எனது மனைவியிடம், எனது கால்களைப் பிடித்துக் கொள்.. நான் அப்படியே இறங்கி வந்து விடுகிறேன் என்று கூறினேன். பின்னர் உடலை வைத்து நகர்ந்து நகர்ந்து படிகளில் இறங்கினேன் என்று கூறினார்.


இந்த சம்பவம் அந்தத் தம்பதியை மிகவும் மனம் நோகச் செய்துள்ளது. எனது கணவரின் மனித உரிமைகள் நசுக்கப்பட்டுள்ளன.  ஏர் கனடா எங்களுக்கு சரியான பதில் தரவில்லை. எங்களுக்கு அவர்கள் உதவவில்லை என்று டியன்னா வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.


இந்த சம்பவம் குறித்து இப்போது ஏர் கனடா வருத்தம் தெரிவித்துள்ளது. ஏர் கனடா நிறுவனம் மாற்றுத் திறனாளிகளுக்கான விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதால் அந்த நிறுவனத்துக்கு ரூ. 81 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


அபராதம் விதித்து என்ன பயன்.. ரோட்னியின் மனதில் ஏற்பட்ட காயத்தை அது ஆற்றுமா?

சமீபத்திய செய்திகள்

news

வயநாடு இடைத்தேர்தல்.. ஆயிரக்கணக்கானோருடன் பேரணி.. பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்

news

தவெக மாநாடு.. அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இல்லை நண்பா.. 2 மணி நேரம் பேசப் போறாராம் விஜய்!

news

சுவையான கொங்கு நாட்டு நெல்லிக்காய் தொக்கு.. சூப்பரா இருக்கும்.. செஞ்சு பாக்கலாமா?

news

சென்னை கோயம்பேடு சந்தையில் எந்த காய் என்ன விலை?... இதோ முழு விபரம்...!

news

தீபாவளி சிறப்பு ரயில்கள்.. சில நிமிடங்களில் டிக்கெட் காலி.. அடுத்து பஸ்ஸைப் பிடிக்க வேண்டியதுதான்!

news

தாறுமாறாக உயர்ந்து வரும் தங்கம் விலை.. கடைப் பக்கம் போகவே பயமா இருக்கேப்பா!

news

ஆயிரத்து 500 ரூபாய் மிச்சம் (சிறுகதை)

news

வங்கக்கடலில் உருவானது.. டாணா புயல்.. நாளை அதி தீவிர புயலாக மாறும்..!

news

மேலடுக்கு சுழற்சி.. தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில்.. இன்று கன மழை பெய்ய வாய்ப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்