ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம் 2024 : சிவனை இப்படி வழிபட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும்!

Nov 15, 2024,11:41 AM IST

சென்னை : சிவ பெருமானை அபிஷேக பிரியர் என்று சொல்லுவார்கள். ஆகம விதிகளின் படி, தினமும் சிவ பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் என மொத்தம் 11 வகையான பொருட்களைக் கொண்டு, 24 நிமிடங்கள் மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். ஆனால் வருடத்திற்கு ஒரு முறை ஐப்பசி மாத பவுர்ணமியில் சிவ பெருமானுக்கு அன்னாத்தால் நடத்தப்படும் அபிஷேகம் மட்டுமே ஒன்றரை மணி நேரம் நடத்தப்படும் மிக நீண்ட அபிஷேகம் ஆகும்.


ஒவ்வொரு மாதத்திலும் வரும் பவுர்ணமி திதி என்பது சிவ வழிபாட்டிற்கு உரியது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் பவுர்ணமி, ஒவ்வொரு நட்சத்திரத்துடன் இணைந்து வரும். அந்த மாதத்தில் அந்தந்த நட்சத்திரத்திற்குரிய பொருளை பிரதானமாக வைத்து சிவ பெருமானின் லிங்க திருமேனிக்கு அபிஷேகம் நடத்தப்படும். இந்த ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு விதமான பலன்களை தரக் கூடியவை. அப்படி ஐப்பசி மாத பவுர்ணமியானது அஸ்வினி நட்சத்திரத்தில் வரும். இந்த நட்சத்திரத்திற்குரிய பொருள் அன்னம் என்பதால் அன்னத்தை கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்கிறோம்.


அது மட்டுமல்ல, சந்திர பகவானின் சாபம் முழுமையாக நீங்கி, தன்னுடைய முழு ஒளியையும் பூமியின் மீது பாய்ச்சி, பூமிக்க மிக அருகில் வரும் நாளும் ஐப்பசி பவுர்ணமி தினம் தான். அதனால் நவகிரகங்களில் ஒருவரான சந்திரனுக்குரிய தானியமான அரிசியால் செய்யப்பட்ட அன்னத்தைக் கொண்டும் இறைவனுக்கு அபிஷேகம் செய்வதாகவும் சொல்லுவதுண்டு. 




உண்மையில் அன்னாபிஷேகம் செய்வதற்கும் மற்றொரு புராண கதையும் சொல்லப்படுகிறது. பிரம்ம தேவரின் ஆவணத்தை அடக்க அவரின் ஐந்து தலைகளில் ஒன்றை கிள்ளி எடுத்தார் சிவ பெருமான். இதனால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததுடன் பிரம்மனின் கபாலமும் சிவனின் கைகளிலேயே ஒட்டிக் கொண்டது. பிறகு அதுவே பிச்சை பாத்திமாக மாறியது. இதற்கு என்ன தீர்வு என்ன திருமாலிடம் சென்று தேவர்கள் அனைவரும் முறையிட்டனர். எவர் ஒருவர் அளிக்கும் அன்னத்தால் அந்த கபால பிச்சை பாத்திரம் நிரம்புகிறதோ, அப்போது தான் சிவனை பிடித்த பிரம்மஹத்திதோஷமும், பிரம்மனின் மண்டை ஓடும் அவரை நீங்கும் என்றார் பெருமாள். உலகில் யார் அன்னம் அளித்தும் சிவனின் கபால பிச்சை பாத்திரம் நிரம்பவில்லை. கடைசியாக காசிக்கு சென்ற போது சிவனின் மீது இரக்கம் கொண்ட அன்னபூரணமி தேவி, அன்னம் அளித்தாள். அவள் அன்புடன் அளித்த அன்னத்தால் பிச்சை பாத்திரம் நிரம்பியதுடன், சிவனின் பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. இது நடந்தது ஐப்பசி பவுர்ணமியில் தான். 


இதன் காரணமாகவே நம்முடைய தோஷங்களும், பாவங்களும் நீங்குவதற்காகவும், உலக உயிர்கள் பசியில் வாடாமல் இருப்பதற்காகவும் சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல ஒவ்வொரு அரிசியும் சிவனின் லிங்க வடிவமாக காட்சி தருவதால், அன்னத்தால் சிவனுக்கு அபிஷேகம் செய்யும் போது ஒரே நேரத்தில் கோடி லிங்கங்களை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும்.




"சோறு கண்ட இடம் சொர்க்கம்" என்று ஒரு பழமொழி சொல்வார்கள். வேலை செய்யாமல் சாப்பாடு கிடைக்கும் இடத்திலேயே தங்குபவர்களுக்காக இந்த பழமொழியை சொல்வார்கள். ஆனால், இதன் உண்மையான பொருள், சிவனுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்தால் அந்த நிமிடமே அவர்களுக்கு சொர்க்கலோக பதவி என்பது நிச்சயிக்கப்பட்டு விடும் என்பதாகும். அதே போல் அன்னாபிஷேகம் தரிசனம் செய்து, அன்னாபிஷேகத்திற்கு அரிசி வாங்கு கொடுப்பவர்களின் தலைமுறைக்கே அன்ன குறைபாடு என்பது ஏற்படாது. சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்த அன்ன பிரசாதத்தை சாப்பிடுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். நோய்கள் தீரும், தொழில் சிறக்கும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். 


அன்னாபிஷேகம் நடைபெறும் ஐப்பசி பவுர்ணமி நாளில் சிவனுக்குரிய பஞ்சாட்சர மந்திரமான "ஓம் நம சிவாய" மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை சொல்லுவது சிறப்பு. இந்த நாளில் சிவபுராணம் படிப்பது மிக மிக சிறப்பான ஒன்றாகும்.

"பொன்னம்பலம்

திருச்சிற்றம்பலம்

அருணாசலம்

மகாதேவ மகாலிங்க

மத்தியார் சுணாசே"

என்ற இந்த மந்திரத்தை 6 முறை உச்சரித்தால் ஓம் நம சிவாய மந்திரத்தை 2000 முறை உச்சரித்த பலன் கிடைக்கும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இரண்டு பேரும் சமரசம் பேசுங்க.. ஜெயம் ரவி, ஆர்த்தி ரவிக்கு.. சென்னை குடும்ப நல கோர்ட் உத்தரவு

news

குறைக்கவோ, நீக்கவோ சொல்லத்தெரியாத அளவுதான் பெரிய ஸ்டார்களின் ஞானம் உள்ளதா?.. ப்ளூ சட்டை மாறன் கேள்வி

news

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல்.. நீதி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட அதிமுக கோரிக்கை!

news

சென்னை குன்றத்தூரில் நடந்த விபரீதம்.. பரிதாபமாக பறி போன 2 உயிர்கள்.. எலி மருந்து இவ்வளவு கொடூரமானதா?

news

Gold Rate.. சரிந்து வந்த தங்கம் இன்று உயர்ந்தது.. சவரனுக்கு ரூ. 80 அதிகரிப்பு!

news

ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம் 2024 : சிவனை இப்படி வழிபட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும்!

news

இலங்கை நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியது.. ஜனாதிபதி அனுரா திசநாயக்கேவின் கட்சி.. 123 இடங்களில் வெற்றி!

news

Rain Updates: காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு!

news

நவம்பர் 15 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

அதிகம் பார்க்கும் செய்திகள்