மதுரை: மதுரை மற்றும் கோயம்பத்தூரில் அமைக்கப்படவுள்ள மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் அதிகாரி, இரு நகரங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ள மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து நேரில் ஆய்வு நடத்தி ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் தற்போது சென்னையில் மட்டும் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இந்த ரயில் சேவை சென்னை மாநகர மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்று நாட்டிலேயே சிறந்த மெட்ரோ ரயில் சேவைகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. போக வேண்டிய இடத்திற்கு வேகமாக போவதற்கும், அலுங்காமல் குலுங்காமல் போவதற்கும் மெட்ரோ ரயில்கள் பெஸ்ட் சாய்ஸ் ஆகும். மேலும் மழைக்காலம், வெயில் காலத்தில் கசங்காமல் காயாமல் பயணிக்கவும் மெட்ரோ ரயில் சேவை சிறப்பானதாக உள்ளது.
பஸ்களில் பயணிக்கும்போது போக்குவரத்து நெரிசல், கூட்ட நெரிசல் என பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. மெட்ரோ அப்படி இல்லை. பெங்களூரில் கூட ஒரு மணப்பெண் கல்யாண மண்டபத்திற்கு போவதற்காக மெட்ரோவுக்கு மணப்பெண் கோலத்தில் வந்ததையும் கூட நாம் சமீபத்தில் பார்த்தோம். போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பத்திரமாக போவதற்கு மெட்ரோதான் சரியான சாய்ஸ் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சென்னையைத் தொடர்ந்து மதுரை மற்றும் கோவை நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இதற்கான வரைவுத் திட்டம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. அடுத்து கடனுதவி பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இந்தத் திட்டங்களுக்கு கடனுதவி அளிக்கவுள்ளது. இதற்காக நேரில் ஆய்வு செய்வதற்காக அதன் அதிகாரி மதுரை மற்றும் கோவைக்கு வந்திருந்தார்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) சென்னையில் ஏற்கனவே நிதியுதவி செய்து வரும் மெட்ரோ இரயில் 2-ஆம் கட்டம் திட்டத்திற்கான காலமுறை ஆய்வு பணிக்காக சென்னை வந்துள்ளது. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் திட்டங்களுக்கு நிதியுதவி செய்வதில் விருப்பம் தெரிவித்ததுடன், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் குழுவுடன் இணைந்து நேற்று (03.07.2024) மதுரையிலும் இன்று (04.07.2024) கோயம்புத்தூரிலும் முதற்கட்ட பார்வையை மேற்கொண்டது.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உயர் முதலீட்டு அலுவலர் வென்யு-கு, தலைமை பொது மேலாளர்கள் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), ரேகா பிரகாஷ், மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிதியுதவி செய்வதில் பிற பன்னாட்டு வங்கிகளும் இதே போன்ற ஆர்வத்தை காட்டி வருகின்றன,
இருப்பினும், மத்திய அரசின் நிதி அமைச்சகம் தான் நிதி நிறுவனத்தை சரியான நேரத்தில் முடிவு செய்யும். சர்வதேச நிதியுதவி கோரி, தமிழ்நாடு அரசு ஏற்கனவே இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஒன்றிய அரசுக்கு திட்ட பரிந்துரைகளை அனுப்பியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மதுரை மெட்ரோ ரயில் திட்டம்
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தைப் பொறுத்தவரை 2 கட்டமாக இந்தத் திட்டம் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டத்தின் நீளம் 31 கிலோமீட்டர் ஆகும். இதில் மொத்தம் 22 மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்படும். ஒத்தக்கடையில் ஆரம்பித்து திருமங்கலம் வரை முதல் கட்ட திட்டம் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இடையில் அமையும் மெட்ரோ நிலையங்கள் - ஒத்தக்கடை, உயர் நீதிமன்ற பெஞ்ச், உத்தங்குடி, எம்ஜிஆர் பேருந்து நிலையம், கே.புதூர், நகர காவல்துறை கமிஷனர் அலுவலகம், கோரிப்பாளையம், சிம்மக்கல், கீழவாசல், தெற்குவாசல், மதுரை ரயில் சந்திப்பு, மதுரா கல்லூரி, வசந்த நகர், பசுமலை, திருப்பரங்குன்றம், திருநகர், தோப்பூர், தர்மத்துப்பட்டி, கப்பலூர் டோல் பிளாசா, திருமங்கலம்
2வது கட்டத் திட்டத்தில் 2 வழித்தடங்கள் இடம் பெறுகின்றன.
முதல் தடம் - கட்டப்புலி நகர் முதல் மதுரை சர்வதேச விமான நிலையம் வரை. மொத்தம் 14 ரயில் நிலையங்கள், 20 கிலோமீட்டர் நீளம்.
2வது தடம் - மணலூர் முதல் செக்காணூரணி வரை . 19 ரயில் நிலையங்கள், 23 ரயில் நிலையங்கள்.
கோயம்பத்தூர் மெட்ரோ
கோயம்பத்தூர் மெட்ரோ திட்டமும் 2 கட்டங்களாக நிறைவேற்றப்படும்.
முதல் கட்டத்தில் 2 வழித்தடங்கள் இடம் பெறும்.
முதல் வழித்தடம் - உக்கடம் பஸ் நிலையம் டூ நீலாம்பூர், 24 கிலோமீட்டர் நீளம். 18 ரயில் நிலையங்கள்.
2வது வழித்தடம் - கோவை சந்திப்பு முதல் வலியம்பாளையம் பிரிவு வரை. 21 கிலோமீட்டர். 14 நிலையங்கள்.
2வது கட்டம்
3வது வழித்தடம் - உக்கடம் பஸ் நிலையம் டூ பிளிச்சி - 24 கிமீ நீளம்.
4வது வழித்தடம் - கரணம்பேட்டை டூ தண்ணீர்ப்பந்தல் வரை - 42 கிலோமீட்டர்.
நாயகன் மீண்டும் வர்றார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்.. செம கேட்ச்தான்!
CKS rocks.. அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி.. செம கேம் பிளான்தான்!
A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு
பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!
இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!
IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?
அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}