"அதிமுக நெல்லிக்காய் மூட்டை.. சிதறிப் போயிருப்பாங்க".. எச். ராஜா பாய்ச்சல்

Sep 26, 2023,11:00 AM IST

சங்கரன்கோவில்:  அதிமுக என்பது அப்போது நெல்லிக்காய் மூட்டை.. நாங்க இல்லாட்டி சிதறிப் போயிருப்பாங்க. இபிஎஸ் இன்று பொறுப்பில் இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் பாஜக. அதை மறந்தால் அவர் நன்றி மறந்தவர் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கடுமையாக சாடியுள்ளார்.


தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக அறிவித்து விட்டது. அதை அதிமுகவினர் கொண்டாடிக் கொண்டுள்ளனர். மறுபக்கம் பாஜக அமைதி காக்கிறது. இந்த நிலையில் சங்கரன்கோவில் வந்த மூத்த தலைவர் எச். ராஜா இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.




பட்டாசு வெடித்துக் கொண்டாட 10 பேர் போதும். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. அன்றைக்கு நாங்க ஒட்டி வைக்காட்டி அதிமுக நெல்லிக்காய் மூட்டை, சிதறிப் போயிருக்கும். அநாவாசியமாக பேசக் கூடாது. இன்று இபிஎஸ் பொறுப்பில் இருக்கிறார் என்றால் பாஜகதான் காரணம். அதை அவர் மறந்தால் நன்றி மறந்தவர் என்று அர்த்தம். 


அதிமுக நெல்லிக்காய் மூட்டை. போட்டுக் கயிற்கை கட்டி பிடிச்சு வச்சு கை வலிச்சது எங்களுக்குத்தான் தெரியும். ஆளாளுக்கு பேசறாங்களே.. அப்போது  நான் சாட்சியா இருந்தேனே. இவர்களை இணைத்து வைத்த சாட்சியாக நான் இருந்தேன். அதனால பெரிய சாதனையெல்லாம் பண்ணதா நினைக்க வேண்டாம். 


மத்தியில் பிஜேபி ஆளுங்கட்சி.. மாநிலத்தில் திமுக ஆளுங்கட்சி. அதிமுக எங்கே இருக்கு.. சொல்லுங்க.. அதிமுக எங்கே இருக்கு. முடிந்தது முடிந்ததுன்னுா.. அதிமுக இன்றோடு முடிந்தது. அப்படித்தான் எடுத்துக்கணும்.  நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி, இபிஎஸ் அதை போட்டுடைத்தான்டி என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் கண்டிப்பாக இதை பின்னர் உணர்வார்கள். அவர்களது செயல்களுக்குரிய பலனை அனுபவிப்பார்கள் என்றார் எச். ராஜா.

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்