அந்த சீட்டு இந்த சீட்டு கேக்கல.. யாரையும் மாத்தவும் சொல்லல..  எடப்பாடி பழனிச்சாமி

Oct 04, 2023,03:49 PM IST

சென்னை: நாங்க யாரிடமும் அந்த சீட்டு இந்த சீட்டு எதுவும் கேக்கல, பாரதிய ஜனதா தலைவரையும் மாற்றவும் சொல்லல்ல. எந்த கோரிக்கையும் வைக்கல என்று அதிமுக பொதுச்செயலாளர் எப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.


அதிமுக -பாஜக முறிவு  தொடர்பான விவாதங்கள் இன்னும் நீண்டு கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து ஐயங்களும் எழுப்பப்படுகின்றன.  காரணம் அதிமுக - பாஜக இடையே ரகசியமாக பேச்சுகள் நடந்து வருவதாக வெளியாகும் தகவல்களால். மேலும் நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை 3 அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்தும் பேசினர். இது மேலும் பரபரப்பையும், குழப்பத்தையும் கூட்டியது.




இந்த நிலையில் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது அவர் கூறுகையில்,  பாஜகவில இருந்து அந்த சீட்டு வேணும் இந்த சீட்டு வேணும் 15 சீட்டு 20 சீட்டு என்று எதுவும் கேட்கல. பாரதிய ஜனதா மாநில தலைவரை  மாற்றவும் சொல்லவில்லை நாங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.


பாரதிய ஜனதா கட்சியில் மத்தியில் இருக்கின்ற தலைவர்  யாரும் எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. இங்கே நடத்த நிகழ்வுகள் தொண்டர்களின் மனதை காயப்படுத்தி விட்டது. ஒரு கட்சி வளமாக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் தொண்டர்கள் உழைக்க வேண்டும். தொண்டர்கள் உழைத்தால் தான் கட்சி வெற்றி பெறும். தலைவர்களை வைத்து கொண்டு கட்சி நடத்த முடியாது. தொண்டர்களின் உணர்வுளை மதிக்கின்ற அளவிற்கு தான்  நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.


அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பார்த்ததில் பெரிதாக எதுவும் இல்லை. ஒரு சட்டமன்ற உறுப்பினராக தொகுதிப் பிரச்சினைகள் தொடர்பாக அவரகள் தங்களது கடமையைச் செய்துள்ளனர்.


நாடாளுமன்றத்திலே அண்ணா திமுக தலைமையிலே மிக பெரிய கூட்டணி அமைத்து வெற்றி பெறும். 2026 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக நல்ல கூட்டணி அமைத்து வெற்றி பெற்று மக்களுக்கு தேவையான திட்டங்களை அளிக்கும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.

சமீபத்திய செய்திகள்

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

அதிகம் பார்க்கும் செய்திகள்