விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்க அதிமுக முடிவு .. தொண்டர்கள் அதிர்ச்சி

Jun 15, 2024,05:10 PM IST

சென்னை: விக்கிரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிமுக அறிவித்துள்ளது. இதனால் தொண்டர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளனர்.


சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும் தோல்வியைத் தழுவியது. பல தொகுதிகளில் 3வது இடத்தையும், சில இடங்களில் நான்காவது இடத்தையும் அக்கட்சி பெற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தநிலையில் விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் மற்றும் பாமக கட்சிகள் போட்டியிடுகின்றன. வேட்பாளர்களையும் அறிவித்து விட்டன. ஆனால் அதிமுக மட்டும் அறிவிக்காமல் இருந்தது. இந்தப் பின்னணியில் இன்று கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தினார்.




இந்த ஆலோசனைக்குப் பின்னர் அதிரடியான முடிவை அதிமுக  அறிவித்துள்ளது. அதன்படி விக்கிரவாண்டி தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


பொதுவாக தேர்தல் என்ற உடனேயே முதலாவதாக களம் இறங்குவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். தேர்தலை கண்டு அஞ்சுகின்ற பயப்படுகின்ற அச்சப்படுகின்ற இயக்கம் அண்ணா திமுக அல்ல என்பதை அனைவரும் நன்கு அறிவர். தமிழகத்தில் அலங்கோல ஆட்சியை நடத்திவரும் திமுகவினர் ஆளுங்கட்சி என்ற அதிகார தோரணையோடு அரசு இயந்திரங்களை முழுமையாக பயன்படுத்தி நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை பொதுச் தேர்தலில் பல்வேறு அராஜகங்களையும் தில்லுமுல்லுகளையும் செய்து பெற்றுள்ள வெற்றி என்பது மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்க முடிவு அல்ல என்பதை நான் அன்றே தெரிவித்து இருந்தேன்.


அராஜகம் என்றால் திமுக என்றால் அராஜகம் திமுகவினர் வன்முறை மற்றும் அராஜகங்களை நிகழ்த்துவதில் கைதேர்ந்தவர்கள். அவ்வாறாக கடந்த காலங்களில் பல்வேறு அராஜகங்களை நிகழ்த்தியதின் காரணமாக 18 8 2009 அன்று நடைபெற்ற இளையான்குடி கம்பம் தொண்டாமுத்தூர் பர்கூர் ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இடை தேர்தலில், 27.2.2009 அன்று நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் உள்பட திமுக ஆட்சியில் நடைபெற்ற இடைத்தேர்தல்கலை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் புறக்கணித்தார்கள்.


திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ அப்போதெல்லாம் இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். 2006ல் மைனாரிட்டி திமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் திமுகவினரால் வெளிப்படையாக நடத்தப்பட்ட வன்முறைகள் அராஜகங்கள் தமிழகமெங்கும் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் கடத்தப்பட்டது, தேர்தல் அதிகாரிகள் கடத்திச் செல்லப்பட்டது, அதிமுக வெற்றி பெற்ற இடங்களில் தேர்தல் அதிகாரியே அச்சுறுத்தி மிரட்டி திமுக தான் வெற்றி பெற்றது என்று அறிவிக்க செய்ததை மக்கள் நன்கு அறிவர்.


அதேபோல் 19.2.2022 அன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் பண பலம், படை பலத்துடன் பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களையும் வன்முறைகளையும் அராஜகங்களையும் கட்டவிழ்த்துவிட்டு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இந்த தேர்தலும் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. திமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட முதல் நாள் தொடங்கி மக்கள் பெரும் அதிருப்தியை ஆளும் திமுக கூட்டணி மீது வெளிப்படுத்தினார்கள். இதனால் தோல்வி உறுதி என்று தெரிந்து திமுக ஈவு இரக்க மற்ற முறையில்,  ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்தது. திருமங்கலம் பார்முலா என்ற பாணியில், மக்கள் வாக்குகளை விலை பேசியது. எப்போது ஈரோடு கிழக்கு பார்முலா என்ற ஒன்றை உருவாக்கி ஆடு மாடுகளை பட்டியிலடைப்பது போல வாக்காளர்களை அடைத்து அருவருக்கத்தக்க ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியது.


எதிர்க்கட்சிகளின் பரப்புரைகள் மக்கள் காதுகளில் விழாத அளவிற்கு சிறைபிடிக்கப்பட்டார்கள். மக்களை அடைத்து வைத்தால் மக்கள் அடைக்கப்பட்டு இருக்கின்ற இடத்திற்கே சென்ற மக்களை சந்திப்பேன் என நான் எச்சரித்த பிறகு பேருந்துகளில் மக்களை அடைத்து சுற்றுலா அழைத்துச் செல்லும் புது ஃபார்முலாவை அறிமுகப்படுத்தியது திமுக. அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, கொலுசு, குக்கர், தங்க காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் என இவை எல்லாவற்றையும் தாண்டி திமுகவின் மிரட்டல் அப்பாவி மக்களை பெரும் அளவில் அச்சுறுத்தியது. திமுகவின் மக்கள் அடைப்பு முகாம்கள் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் பரவலாக முளைத்திருந்தன. அந்த இடத்திற்கு வர மறுத்த அப்பாவி மக்கள் திமுகவினாரால் விரட்டப்பட்டார்கள். அவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு காலை மற்றும் மதிய உணவு வீட்டுக்கு செல்லும்போது வீட்டில் உள்ள அனைவருக்கும் இரவு உணவு மற்றும் பல்வேறு பரிசு பொருட்களும் வழங்கி ஜனநாயக படுகொலை நடந்தேறியது.


திமுகவின் அழைக்கும் இடத்திற்கு காலை முதல் இரவு வரை உட்கார்த்திருக்கவில்லை என்றால் முதியோர் உதவி தொகை வேறு எந்த அரசு நலத்திட்டங்களையும் வழங்கப்படாது என்கிற மிரட்டலுக்கு பயந்த மக்கள் சொந்த மண்ணில் அகதிகளை போல் நடத்தப்பட்ட விதத்தை நினைத்தால் இதயம் பதறுகிறது. திமுகவினர் செய்யும் அனைத்து அராஜகங்களையும் ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியிடமும் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள மாநில இந்திய தலை தேர்தல் ஆணையத்திடமும் பலமுறை நேரில் உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தும் ஆளும் கட்சிக்கு எதிரான எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி ஜனநாயக படுகொலை அரங்கேறியது.


அந்த வகையில் திமுக ஆட்சியில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல், ஜனநாயகம் முறைப்படி சுதந்திரமாக நடைபெறுமா என்ற சந்தேகமும் கேள்வியும் எழுந்துள்ளது. திமுகவின் அமைச்சர்களும் திமுகவினர்களும் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதோடு படைபலம் பணபலத்துடன் பல்வேறு அராஜக மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவார்கள் என்பதாலும் மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டார்கள் என்பதாலும் தேர்தல் சுதந்திரமாகவும் நடைபெறாது என்பதாலும் 10 7 2024 அன்று நடைபெற உள்ள விக்ரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடை தேர்தலில் அதிமுக புறக்கணிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்