2024 லோக்சபா தேர்தல்: அதிமுக தொகுதி பங்கீடு குழு.. முதல் ஆலோசனை கூட்டம்.. யாருக்கு எவ்வளவு?

Jan 29, 2024,06:07 PM IST

சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு அதிமுக தொகுதி பங்கீடு குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கியது. இந்த தொகுதி பங்கீடு குழுவை தொடர்ந்து அதிமுக பிரச்சார குழு மற்றும் விளம்பர குழுவின் ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற உள்ளன.


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதிய கட்சிகளை இணைக்கலாமா..? அல்லது யாருடன் கூட்டணி அமைப்பது..? எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம்.. போன்றவை குறித்த ஆலோசனை இன்று நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்தும், கூட்டணி கட்சிகள் குறித்தும், ஆலோசனை கூட்டம்  நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் திமுகவினர் ஏற்கனவே ஆலோசனைக் கூட்டம் நடத்தி, தேர்தல் பணிகள் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். நேற்று காங்கிரஸுடன் முதல் கட்ட தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்றுள்ளது.




இந்நிலையில் அதிமுக தொகுதி பங்கீடு தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று தொடங்கியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கே.பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்று உள்ளனர்.


இதில் புதிய  கட்சிகளை அதிமுக கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து அதிமுக பிரச்சார குழு மற்றும் விளம்பர குழுவின் ஆலோசனை கூட்டங்களும் நடைபெற உள்ளன.


2019 தேர்தலின் போது பாஜகவுடன் அமைத்த கூட்டணியை விட்டு விலகுவதாக அதிமுக ஏற்கனவே அறிவித்துள்ளது நினைவிருக்கலாம். அதேசமயம், அதிமுக கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் பாஜக கூட்டணியில் தொடர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. அதிமுக கூட்டணிக்கு யாரெல்லாம் புதிதாக வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.  அடுத்தடுத்து நடைபெறும் பேச்சுக்களின்போதுதான் அதிமுக கூட்டணி குறித்த ஒரு வடிவம் முழுமையாக கிடைக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

news

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

news

Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

news

ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!

news

ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்

news

ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்