அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி.. அதிமுக செம ஹேப்பி.. திண்டுக்கல் சீனிவாசன் சூப்பர் குஷி!

Mar 27, 2025,06:33 PM IST

சென்னை:  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பை தொடர்ந்து, அதிமுகவினரின் பேச்சு நடவடிக்கைகளில் ஒரு உற்சாகம் தெரிகிறது. இதன் மூலம் அதிமுக பாஜக இடையான கூட்டணி உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பை தொடர்ந்து அதிமுக வட்டாரத்தில் உற்சாகம் நிலவி வருகிறது. இப்பொழுதே கூட்டணி முடிவாகி விட்டதாக அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும், எண்ணி செயல்பட துவங்கி விட்டனர்.


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது பேசு பொருளாகியுள்ளது. ஆனால் அந்த சந்திப்பின்போது கூட்டணி குறித்து  பேசவே இல்லை என்று நேற்று எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். அதேசமயம், அதிமுக தலைவர்களின் பேச்சு நடவடிக்கைகள் பாஜக உடனான கூட்டணி உறுதியாகி விட்டது என்பதையே சுட்டிக் காட்டுவதாக உள்ளது.




ஒருபுறம், அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை புகழ்ந்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் இந்தியாவின் இரும்பு மனிதர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. எட்டு கோடி தமிழர்களுடைய ஒரே நம்பிக்கை. உலகத் தமிழர்களின் அடையாளம் புரட்சித்தலைவர் ஐயா எடப்பாடி அவர்கள் இந்திய  தேசத்தின் இரும்பு வைரம் என்று வர்ணிக்க கூடிய மாண்புமிகு மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்களை நேரடியாக சந்தித்தது இன்று இந்திய நாட்டிலேயே கவனத்தை ஈர்த்திருக்கக் கூடிய தலைப்புச்  செய்தியாக மாறி இருப்பது ஏன் என்று எண்ணிப் பார்க்கிறோம் என பதிவிட்டுள்ளார்.  இதன் மூலம் பாஜகவுக்கு மீண்டும் பட்டுக் கம்பளம் விரிக்க அதிமுக தயாராகி விட்டதையே உணர்த்துவதாக உள்ளது.


மறுபுறம், இன்று சட்டப்பேரவைக்கு வருகை தந்த பாமக எம்எல்ஏக்கள் ஜி.கே மணி மற்றும் அருளுடன் அதிமுக எம்எல்ஏ திண்டுக்கல் சீனிவாசன் ஜாலியாக பேசிக்கொண்டே வந்தார். அவர் அருகில் இருந்த பாமக எம்எல்ஏ சதாசிவத்திடம், "அதிமுக, பாமக, அப்புறம் பாஜக என்று சிரித்துக் கொண்டே பேசி வந்தார். இதைப் பார்த்த செய்தியாளர்கள் அவரிடம், கூட்டணி உறுதியாகி விட்டதா என்று கேட்டபோது, நாங்க கூட்டணிங்க என்று சொல்லி விட்டு குஷியோடு போனார் திண்டுக்கல் சீனிவாசன்.


இப்படி அதிமுக மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து பாஜக அதிமுக கூட்டணி குறித்து பல்வேறு கருத்துகளை கூறிவரும் நிலையில் அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி உறுதியாகிவிட்டதாக பேச்சு அடிபடுகிறது. இப்போதைக்கு கூட்டணி குறித்து பகிரங்கமாக சொல்லிக்காமல் இருப்போம். சில மாதங்கள் கழித்து கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று அதிமுக பாஜக தலைமை முடிவெடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.


அதேசமயம், இந்தக் கூட்டணியை மக்கள் ஏற்க வேண்டும் என்றால் மத்திய அரசு சார்பில் தமிழ்நாட்டுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்றும் அதிமுக தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டுள்ளதாம். எனவே அதற்கேற்றார் போல முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்