கோயம்பத்தூர்: பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்பதில் தெளிவாக இருக்கின்றோம் என முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் இது குறித்து செய்தியாளர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் கூறியதாவது:
தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் உள்ளது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டேன். நாடாளுமன்ற தேர்தலின் போதே, சட்டமன்ற தேர்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லை என்பதை எங்களது நிலைப்பாடு என்று சொல்லி விட்டேன். அதிமுக பற்றி சில ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
அதிமுக திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுகிறது
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்றும் பாராமல் தன்னை கொச்சைப்படுத்தி முதலமைச்சர் கடந்த சில நாட்களாக விமர்சிக்கிறார். அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். முதல்வர் தனது கட்சி நிர்வாகிகளுக்கு எழுதிய மடலில் நான் அவரைப் பற்றி கொச்சைப்படுத்தி பேசியதாக கூறியுள்ளார். நான் முதல்வராக இருந்தபோது ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அப்போது என்னை பற்றி தனிப்பட்ட வகையில் பல விமர்சனங்களை செய்துள்ளார். தற்போது நடைபெற்ற கூட்டத்தில் கூட கரப்பான் பூச்சி எனக் கூறியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு மக்கள் வளர்ச்சி திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. குறிப்பாக பில்லூர் மூன்று கூட்டு குடிநீர் திட்டம், அத்திக்கடவு அவிநாசி திட்டம், உக்கடம் மேம்பாலம், ஐடி பூங்கா ஆகியவற்றிற்கு அதிமுக ஆட்சி காலத்தில் தான் அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், அத்திக்கடவு அவிநாசி இரண்டாம் கட்ட திட்டம், விமான நிலைய விரிவாக்க திட்டம், மேற்கு புறவழி சாலை திட்டம் என அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. சில திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக அதிமுக ஆட்சி காலத்திலேயே 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றது.
முதல்வர் ஸ்டாலின் பதவி, நிலை மறந்து செயல்படுகிறார்
அதிமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து உதயநிதியுடன் விவாதிப்பதற்கு எங்கள் கட்சியிலும் முன்னாள் அமைச்சர்கள் பலர் இருக்கின்றனர். முதல்வரிடம் கேள்வி கேட்டால் உதயநிதி ஏன் பதில் சொல்ல வேண்டும். அப்படி என்றால் திறமை இல்லாத பொம்மை முதல்வராக இருக்கிறார் என விமர்சிப்பது சரியானது தானே. பிற மாநிலங்களில் ஒரே ஒரு முதல்வர் இருக்கும்போது தமிழகத்தில் மட்டும் நான்கு முதல்வர்கள் உள்ளனர். அதிகாரம் மிக்கவர்களாக உள்ள அவர்கள் யார் என்று ஊடகங்களுக்கே தெரியும்.
முதல்வர் ஸ்டாலின் தனது பதவியையும் நிலையையும் மறந்து இதுபோன்ற விமர்சனங்களை செய்து வருகிறார். அதிமுக ஆட்சி காலத்தில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சிக்கிறார். ஆனால், அதிமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கும் அமல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கும் தான் தற்போது திமுக ஆட்சிக் காலத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது.
திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது. காவல்துறையினர் முழு சுதந்திரத்தோடு செயல்பட முடிவதில்லை. இதனால் போதைப் பொருள் பண்பாடு விற்பனை தயாரிப்பு என அனைத்தும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}