மரபு மீறாதவர் என்றால்.. எங்களது துணைத்  தலைவருக்கு சீட் கொடுங்க.. எடப்பாடி பழனிச்சாமி பலே பேச்சு!

Feb 12, 2024,06:20 PM IST

சென்னை: மரபுகளை மீறக் கூடாது என்று சபாநாயகர் கூறுகிறார். அப்படியானால் அதிமுக கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, சட்டப்படியான நடைமுறைகளால் தேர்வு செய்யப்பட்ட எங்களது எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு சட்டசபையில் உரிய இடத்தை சபாநாயகர் அப்பாவு ஒதுக்குவார் என்று எதிர்பார்க்கிறோம் என்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.


சட்டசபைக் கூட்டத்  தொடரில் ஆளுநர் உரைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி  பழனிச்சாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:




கடந்த ஆண்டு போலவே, எந்தவிதமான குறிப்பும் ஆளுநர் உரையில் இல்லை. எந்தவிதமான கொள்கை விளக்கமும் முறையாக இல்லை. எனவே இந்த ஆட்சியால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிட்டாது என்பதையே ஆளுநர் உரை உணர்த்துகிறது. புதிய மக்கள் நலத் திட்டங்களையும் அறிவிக்காத இந்த அரசு வெறும் பசப்பு வார்த்தை ஜாலங்களையே வாரியிறைத்துள்ளது. 


எனது அரசில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து விட்டு தங்களது பெயரை தாங்களே சூட்டிக் கொண்டது வெட்கக்கேடானது. ஆளுநர் உரை உப்புச்சப்பில்லாத உரை, ஊசிப் போன உணவுப் பண்டம் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.


தொடர்ந்து ஆளுநர் விவகாரம் குறித்த கேள்விகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக ஆளுநர் ஏற்கனவே சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் கேட்டுள்ளார். அதை நிறைவேற்றாத காரணத்தால் அவர் உரையாற்றாமல் போயிருக்கிறார். 


இது அரசுக்கும் சபாநாயகருக்கும் இடையிலான பிரச்சினை. இதுகுறித்து அரசையும், ஆளுநரையும்தான் கேட்க வேண்டும். ஆளுநருக்கு என்ன பிரச்சினை, சபாநாயகருக்கு என்ன பிரச்சினை, அரசுக்கு என்ன பிரச்சினை என்பதை அவர்களிடத்தில்தான் கேட்க வேண்டும். அவர்களிடம் கேட்டால்தான் இதற்கு விடிவுகாலம் பிறக்கும். 


மரபுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சபாநாயகர் கூறுகிறார். சபாாயகரே பல மரபுகளை கடைப்பிடிக்கவில்லை. இதுகுறித்து நானே பலமுறை கோடிட்டுக்காட்டியுள்ளேன்.  இனியாவது கடைப்பிடிப்பார் என்று நம்புகிறோம். மரபைக் காக்க வேண்டும் என்று நாங்களும் எடுத்துச் சொல்வோம்.  எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கைக தொடர்பாக ஏதாவது காரணத்தைச் சொல்லி வருகிறார் சபாநாயகர். 


மரபை கடைப்பிடிக்க வேண்டும் என்று  சபாநாயகர் சொல்லியுள்ளார்.  எனவே, நாங்கள் வைத்த கோரிக்கையை அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்றுதான் அனைவரும் எதிர்பார்க்கிறோம். அவர் ஒருதலைபட்சமாக செயல்படுவது குறித்து பொதுமக்கள்தான் கேட்க வேண்டும் என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்