அதிமுகவை எப்படி நடத்த வேண்டும் என்று சொல்ல சி.டி. ரவி யார்?... பாஜகவுக்கு ஐடி விங் செயலர் கண்டனம்

Feb 04, 2023,09:35 AM IST
சென்னை:  அதிமுகவை எப்படி நடத்த வேண்டும் என்று அறிவுரை சொல்ல சி.டி . ரவி யார். கர்நாடக பாஜகவை எப்படி நடத்த வேண்டும் என்று அவருக்கு அறிவுரை சொன்னால் ஏற்றுக் கொள்வாரா என்று அதிமுக ஐடி விங் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் அதிரடியாக கேட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தொடர்பாக அதிமுக கூட்டணிக்குள் மிகப் பெரும் குழப்பம் நிலவுகிறது. அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஆளுக்கு ஒரு வேட்பாளரை அறிவித்துள்ளனர். பாஜக மறுபக்கம் அமைதியாக இருக்கிறது. இரு கட்சிகளும் சேர்ந்து போட்டியிடுமாறு அது கூறியுள்ளது.

அதேசமயம், அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட  வேட்பாளர்கள் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அவர்களை வேட்பு மனு தாக்கல் செய்வதை தாமதப்படுத்துமாறு டெல்லியிலிருந்து தகவல் வந்ததால்தான் இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்யாமல் உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு பாஜக மேலிடப் பார்வையாளருமான சிடி. ரவி நேற்று சென்னை வந்திருந்தார்.

அவர் முதலில் ஓபிஎஸ்ஸையும், பின்னர் எடப்பாடி பழனிச்சாமியையும் சந்தித்தார். அதன் பின்னர் மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேர்தலில் பாஜக போட்டியிடுகிறதா என்று செய்தியாளர்கள் திரும்பத் திரும்ப கேட்டனர். ஆனால் சிடி ரவி, அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் இரு தலைவர்களுக்கும் வலியுறுத்தினோம். திமுக தீய சக்தி. அதை தோற்கடிக்க  ஒருங்கிணைந்த அதிமுகவால்தான் முடியும் என்று மட்டுமே கூறினார். பாஜக போட்டியிடுகிறதா இல்லையா என்பது குறித்து நேரடியாக அவர் பதிலளிக்கவில்லை.



மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், 7ம்  தேதி வரை அவகாசம் உள்ளது. அப்போது எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம் என்றார். இந்த நிலையில் பாஜகவின் போக்குக்கு அதிமுகவில் கடும்  எதிர்ப்பும், அதிருப்தியும் எழுந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர்  சிங்கை ராமச்சந்திரன் டிவீட் போட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

எங்களது கட்சியில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல இந்த சிடி ரவி யார்? நீங்கள் தேசியக் கட்சியாக
இருந்தால் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று அர்த்தமா? கர்நாடக பாஜகவை எப்படி நடத்த வேண்டும் என்று நாங்கள் அறிவுரை சொன்னால் அதை சிடி ரவி ஏற்பாரா?

திமுகவுக்கு எதிராக தனித்துப் போட்டியிட்டு ஒரு இடத்தில்வெல்ல முடியாத  நீங்கள் எங்களுக்கு அட்வைஸ் பண்ணலாமா.. அதிமுக 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை ஆண்ட கட்சி. எங்களுக்குதீய சக்தி யார் என்று நீங்கள் சொல்லிக் கொடுக்கிறீர்களா?  புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 1972ம் ஆண்டு ஏன் இந்தக் கட்சியை ஆரம்பித்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுடைய எல்லை என்பதை உணர்ந்து செயல்படுங்கள் என்று காட்டமாக கூறியுள்ளார் சிங்கை ராமச்சந்திரன்.

சிங்கை ராமச்சந்திரனின் இந்த கடுமையான டிவீட்டுக்கு அதிமுகவினர் பெருமளவில் வரவேற்பு தெரிவித்து  வருகின்றனர். சிங்கை ராமசந்திரன் ஐடி விங் மாநிலச் செயலாளர் என்பதால், நிச்சயம் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாமல் இந்த டிவீட் போட்டிருக்க வாய்ப்பில்லை என்பதால் அதிமுக, பாஜகவை கடுமையாக எதிர்க்கவும் துணிந்து விட்டதாகவே கருதப்படுகிறது.

பாஜக பதிலடி

இந்த நிலையில் சிங்கை ராமச்சந்திரனுக்கு பாஜக ஐடி விங் தலைவர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், எல்லாம் தெரியும் என்றால் பின்னர் எதற்காக 2017லில் டெல்லி வழிகாட்டுதல் படி  இணைந்தீர்கள், அன்று அது நடக்கவில்லை என்றால் இன்று உங்கள் கட்சி யாரிடம் இருந்திருக்கும்? சிடி ரவி கூறியது எங்களுடைய கருத்து தானே தவிர முடிவெடுக்க உங்களுக்கு உரிமை உள்ளது என்று கூறியுள்ளார் நிர்மல் குமார்.

சமீபத்திய செய்திகள்

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?

அதிகம் பார்க்கும் செய்திகள்